மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்... வெற்றியை ரசிகர்களோடு கொண்டாடிய மூர்த்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது புதிய சாதனையை எட்டி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் தீவிரமான ரசிகர்கள் அந்த சீரியல் அணியினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வெற்றியை தன்னுடைய ரசிகர்களுக்கு அர்ப்பணித்து அந்த சீரியலில் மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் ஸ்டாலின் உருக்கமாக நன்றி கூறியுள்ளார்.

மகிழ்ச்சியை பகிர்ந்த ஸ்டாலின்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நான்கு வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கொராணா காலகட்டத்திலும் கூட நிறுத்தப்படாமல் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தது. பல சீரியல்கள் கொரோனா காலகட்டத்தில் முடிவடைந்து இருந்தாலும் இந்த சீரியல் முடியாதது அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. தற்போது இந்த சீரியலின் வெற்றியை மகிழ்ச்சியாக ரசிகர்களிடம் பகிர்ந்து உள்ளார் ஸ்டாலின். அந்த சீரியலில் மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த கதை
கூட்டுக் குடும்பங்களில் நடக்கும் சண்டைகள், பாச பரிமாற்றங்கள், ஒற்றுமை உணர்வுகள், விட்டுக் கொடுத்தல், விழாக்கள்,காதல் என அனைத்தையும் எளிமையாக காட்டி எதார்த்தமாக கதைக்களத்தில் தத்ரூபமாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்ட சீரியலாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நான்கு தூண்களுக்குள்ளே கதை சென்றாலும், கடை, வீடு என மாற்றி மாற்றி ஒரே சீனை காட்டினாலும் கூட ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் இந்த சீரியலுக்காக இருந்து வருகிறார்கள். மக்களோடு ஒன்றிப்போன சீரியலாக இது இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அண்ணன் தம்பி பாசம்
பாண்டியன் ஸ்டோர் சீரியல் 2018 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 4ஆம் நாள் ஒளிபரப்பாக தொடங்கியது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை நெருங்கி இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வெற்றியை சீரியல் நடிகர்கள், ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமையை மையமாகக் கொண்ட பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குடும்பத்தின் மூத்த அண்ணனாகவும் சத்தியமூர்த்தி ஆகவும் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் ஸ்டாலின் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி ஆகிய நான்
ஸ்டாலின் வெளியிட்ட போஸ்டில், இன்று பாண்டியன் ஸ்டோர் ஆயிரம் ஆவது அத்தியாயம் எட்டியுள்ளது. சத்தியமூர்த்தி ஆக வாழ்வதற்கு என்னை தேர்வு செய்தவர்களுக்கும், விஜய் தொலைக்காட்சியை சார்ந்தவர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சக நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் இத்தொடரை வெற்றியடைய முழு முதல் காரணமாகிய ரசிகர்களாகிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவோடு தொடர்ந்து பயணிக்கிறோம். என்று சீரியலில் அவர் அறிமுகமாகும் போது எடுத்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வைத்த இமேஜை போஸ்ட் செய்திருக்கிறார். இந்த போஸ்ட்க்கு தற்போது ரசிகர்கள் ஹார்ட்டின்களை அனுப்பி லைக்களை குவித்து வருகிறார்கள்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications