ரகசியமாய் மறைத்து வைத்த காதலை பிரபலப்படுத்திய விஜய் டிவி சீரியல் ஜோடி.. பிறந்தநாள் ஸ்பெஷலாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த நடிகர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர்.
இதுவரைக்கும் மறைத்து வைத்த காதலை தன்னுடைய பிறந்த நாளில் நடிகை சம்யுதா ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் உருவான அடுத்த காதல் ஜோடிக்கு இப்போதே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

காதலை அறிவித்த புதிய ஜோடி
சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல நடிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது விஜய் டிவியின் பிரபலங்கள் சேர்ந்திருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த நடிகரான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுதா தாங்கள் காதலிக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களின் இடம் பகிர்ந்து இருக்கின்றனர்.

மறைத்து வைத்த காதல்
விஷ்ணுகாந்த் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலிலும் இதற்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை சீரியலிலும் நடித்திருக்கிறார். அதுபோல சம்யுதா நிறைமாத நிலவே எனும் சீரியல் மூலமாக பிரபலமானவர்தான். இவர்கள் இருவரும் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தங்களுடைய காதலை மறைத்து வைத்திருக்கின்றனர். இருவரும் ஒன்றாக நடித்த சிப்பிக்குள் முத்து சீரியல் தற்போது முடிவடைந்த நேரத்தில் இவர்களுடைய காதலை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்கள்.

காதல் பதிவு
நடிகை சம்யுக்தா தன்னுடைய மனம் கவர்ந்த விஷ்ணுகாந்த்தை டேக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னை கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றியவர். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி. இந்த பிறந்த நாளிலிருந்து உங்களுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

எப்போ திருமணம்
மேலும் உங்கள் அனைவரின் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறோம். இதுவரை நீங்கள் எனக்கு கொடுத்த அன்பு தான் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவாகும். இப்போது நாங்கள் அனைவரும் அதை உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பாக பெற விரும்புகிறோம். உங்கள் அன்பான இதயத்தால் எங்கள் இருவரையும் ஆசீர்வதியுங்கள் என்று சம்யுதா வெளியிட்ட பதிவிற்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விரைவில் இவர்களுடைய திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications