அந்த நேரத்தில் கதறி அழுதுட்டேன்.. "அண்ணனின் இறப்பு“ இனி அந்த கதையில் நடிக்க மாட்டேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அதிகமாக கதாநாயகனுக்கு தங்கை கேரக்டரில் நடிப்பதற்கு ஆசைப்பட மாட்டேன் என்றும் அதற்கான காரணம் பற்றி கூறியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணன் மீது அதிகமாக பாசத்தில் இருந்த நிலையில் நம்ம வீட்டு பிள்ளை எனும் திரைப்படத்தில் நடிக்கும் போது கதறி அழுது இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு அண்ணன்கள் எதிர்பாராத விதமாக திடீரென இறந்து விட்டதால் அண்ணன் செண்டிமெண்ட் உள்ள திரைப்படத்தில் தான் தன்னால் நடிக்க முடியவில்லை என கூறியிருக்கிறார்.

தொகுப்பாளராக அறிமுகம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக அதுவும் அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ஆரம்பித்து பிறகு சன் டிவியில் மாநாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற பிறகு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கி அதற்கு பிறகு அட்டகத்தி என்ற திரைப்பட திரைப்படத்தில் நடித்ததில் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதற்கு பிறகு காக்கா முட்டை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறார். அதற்கு பிறகு வட சென்னை, கானா என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குடும்பம்
ஐஸ்வர்யா ராஜேஷ் 1990 இல் சென்னையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்து இருக்கிறார். இவருடைய தந்தை ராஜேஷ் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகராக இருந்திருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது அவர் இறந்து விட்டாராம். ஐஸ்வர்யாவின் அம்மாவும் நாகமணி என்பவர் நடன கலைஞராகத்தான் இருந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அவரது தாத்தாவும் நடிகராக தான் இருந்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் மூன்று மூத்த சகோதரர்கள் அவர்களுக்கு கடைக்குட்டி ஆக ஐஸ்வர்யா இருந்திருக்கிறார். முதல் இரண்டு அண்ணன்களோடு ஐஸ்வர்யாவுக்கு அதிகமான பாசம் இருக்குமாம். மூன்றாவது அண்ணன் மணிகண்டன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த வாரம் தான் வெளியேறி இருந்தார்.

தங்கையாக நடிக்க காரணம்
ஆனால் அதிகமான பாசமும் பிணைப்பும் இருந்தது ஐஸ்வர்யாவுக்கு அவருடைய மூத்த அண்ணனோடு தான். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக சிறுவயதிலேயே இறந்து விட்டாராம். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தில் இரண்டாவது அண்ணனும் அவருடைய 21 வது வயதில் எதிர்பார்க்காத விதமாக இறந்துவிட்டாராம். இவர்கள் இருவருடைய மரணத்தால் ஐஸ்வர்யா அதிகமாகவே பாதிப்படைந்து இருக்கிறார். அதனால்யே அண்ணன்கள் சென்டிமென்ட் உள்ள திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்து இருந்தாராம். ஆனால் சிவகார்த்திகேயன் ரொம்பவே வற்புறுத்தி கேட்டதால்தான் நம்ம வீட்டு பிள்ளை என்னும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்திருந்தார்.

கதறி அழுத நிகழ்வு
நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் "உன் கூடவே புறக்கணும்" எனும் பாடல் வரும் இடத்தில் மனக்கோளத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கையைப் பிடித்துக் கொண்டு சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடந்து வருவார் அதை சூட்டிங் எடுக்கும் போது ஐஸ்வர்யா ராஜேஷ் உண்மையிலேயே தனக்கு திருமணம் முடிந்து செல்வது போன்ற ஒரு நினைப்பு வந்துவிட்டதாம். அதனால் திடீரென அவர் கதறி அழுது விட்டாராம். அங்கிருந்தவர்கள் எல்லாம் பதறிப் போய் என்ன ஆனது என விசாரித்தாலும் தனக்கு தன்னுடைய அண்ணன்களின் நினைவு வந்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

இனி அப்படி நடிக்க மாட்டேன்
அது மட்டும் அல்லாமல் மணிகண்டனோடு தனக்கு பெரிய அளவில் அண்ணன் என்கிற நினைப்பு இல்லாமல் அவர் என்னுடைய பிரண்டு என்பது போலத்தான் எனக்கு எப்போதுமே தோன்றும். அண்ணன்கள் என்றதும் முதல் அண்ணனையும் இரண்டாவது அண்ணனையும் ரொம்பவே பிடிக்கும். அவர்களுடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். அதனாலே இனி நான் எந்த அண்ணன் சென்டிமென்ட் திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்றும் ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications