"ஜுரத்துக்காக ஹாஸ்பிடலுக்கு போயி கணவரின் உயிரை”.. எதிர்நீச்சல் பட்டம்மாள் நிஜ வாழ்க்கை வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் கேரக்டரில் நடித்து வரும் பாம்பே ஞானம் தன்னுடைய கணவரின் இறப்பு நேரத்தில் மருத்துவமனையில் தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

ஒரு பிரபலமாக இருக்கும் பாம்பே ஞானம் தன்னுடைய வாழ்க்கையிலே இப்படி நடந்திருக்கிறது என்றால் சாதாரண பொது மக்களின் வாழ்க்கையில் சொல்லவா வேண்டும் என்று அனுதாபம் கூறி ரசிகர்களுக்கு பல அறிவுரைகளையும் கூறியிருக்கிறார்.

கதாநாயகியாக கலக்கும் பட்டம்மாள்

கதாநாயகியாக கலக்கும் பட்டம்மாள்

50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருந்தாலும் பாம்பே ஞானம் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவாக நடித்து இப்போது பட்டமாளாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகிக்கு இருக்கும் முக்கியத்துவம் இவருக்கும் இருக்கின்றது. கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் மதுமிதா நடிக்க அவருக்கு உறுதுணையாக வீட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் வில்லனாக இருந்த குணசேகரனை பட்டம்மாள் வாயை திறந்த பிறகு, புலம்ப வைத்திருக்கிறார்.

மருத்துவமனைக்கு சென்ற காரணம்

மருத்துவமனைக்கு சென்ற காரணம்

அதனால் ரசிகர்கள் பலரும் பட்டமாளை அதிகமாக பாராட்டி வருகின்றனர். பட்டம்மாள் கேரக்டரில் நடிக்கும் பாம்பே ஞானம் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அதே கேரக்டராகதான் இருந்து வருகிறார். இவர் போல்டான கேரக்டராக இருந்தாலும் இவருடைய கணவரின் இறப்பு நேரத்தில் இவர் அதிகமாக உலகத்தையே வெறுத்து விட்டாராம். பத்து வருடங்களுக்கு முன்பு இவருடைய கணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில நாட்களாக காய்ச்சல் சரியாகாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். மருத்துவமனையில் ஆரம்பத்தில் இவருக்கு ஆண்டிபயாட்டிக் மருந்து கொடுத்து சில சிகிச்சைகள் எடுத்திருக்கிறார்கள். அதிலும் சரியாகாததால் பல நாட்களாக மருத்துவமனையிலேயே இருக்க வைத்து விட்டார்களாம்.

எதிர்பார்க்காத மருத்துவமனை செலவு

எதிர்பார்க்காத மருத்துவமனை செலவு

10 வருடங்களுக்கு முன்பே ஒரு நாளைக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறாராம். ஆனாலும் சரியான விளக்கத்தை மருத்துவர்கள் சொல்லவே இல்லையாம். அந்த டெஸ்ட் எடுக்க வேண்டும் இந்த டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று இவரை அலைய வைத்துக் கொண்டுதான் இருந்தார்களாம். காய்ச்சலுக்காக நடந்து சென்று மருத்துவமனைக்கு அட்மிட்டான இவருடைய கணவர் கோமா நிலைக்கு சென்று விட்டாராம். பல நாட்களாக கோமா நிலையில் இருந்து ஒரு மாதத்திற்கு மேலாக மீண்டும் ICUக்கு மாற்றப்பட்டு டெஸ்ட் அமெரிக்காக்கு அனுப்ப வேண்டும் என்று இவர்களுடைய மைண்டை மாற்றிவிட்டார்களாம்.எல்லாத்துக்கும் சரி என்று இவர்கள் கேட்கும் பணத்தை எல்லாம் பாம்பே ஞானம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தாராம்.

ரசிகர்களுக்கும் அறிவுரை

ரசிகர்களுக்கும் அறிவுரை

ஆனாலும் யாராலும் சரி செய்ய முடியாமல் கடைசியில் இவருடைய கணவர் இறந்து போய்விட்டார். அந்த ஒரு குற்ற உணர்ச்சி இவருக்கு அதிகமாக அப்போது இருந்ததாம். நடந்து வந்து மருத்துவமனையில் சேர்ந்தவருக்கு கடைசியில் எப்படி ஆகிவிட்டது நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் ஆகிவிட்டது என்று இவர் அனைவரும் மீதும் வெறுப்போடு தான் இருந்தாராம். அதனாலே இவர் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருந்திருக்கிறார். ஆனால் இந்த எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேண்டும் என்று இவரிடம் சுமார் எட்டு மாதங்களாக கேட்டுக் கொண்டே இருந்தார்களாம். பிறகு கதையின் ஆழத்தை பார்த்து தான் இவர் இந்த சீரியலில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரசிகர்களும் யாருக்கும் உடல்நிலை சரியில்லை என்றாலும் மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம், ஒன்றிற்கு மூன்று பேரிடம் விசாரித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் சில மருத்துவர்கள் நம்மளை முட்டாளாக்கி விடுவார்கள் என்று விரக்தியோடு பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+