திருமணமான சில மாதங்களுக்குள்.. நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு நடிகை தீபிகா உருக்கம்
சென்னை: டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனாகாணும் காலங்கள் சீரியலில் நடிகை தீபிகா மற்றும் அந்த சீரியலில் நடிக்கும் ராஜா வெற்றி பிரபுவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக இந்த ஜோடி சீரியலில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உருக்கமான கேப்ஷன் கொடுத்து இருக்கின்றனர்.

சின்னத்திரையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் கனா காணும் காலங்கள் சீரியலில் ஒன்றாக நடித்த ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக தங்களுடைய திருமணத்தை நடத்தி முடித்து இருந்தனர்.
தீபிகா ஆரம்பத்தில் தான் ஒருவரை காதலிப்பதை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். ஆனால் தன்னுடைய காதலன் யார் என்பதை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் V என்ற எழுத்தை வைத்திருப்பதால் அது ராஜா வெற்றி பிரபு தானா என்று ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அதற்கு சிரிப்பு மட்டுமே தீபிகா பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தான் தன்னுடைய எங்கேஜ்மென்ட் அன்று தான் காதலிக்கும் நபர் ராஜா வெற்றி பிரபு தான் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார் அதைத்தொடர்ந்து ஜோடிக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சீரியல் பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். அதை தொடர்ந்து இவர்களுக்கு பிரமாண்டமாக திருமணமும் நடைபெற்றது.
நடிகை தீபிகா தன்னுடைய சோகமோ, சந்தோஷமோ அதை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார். ஆரம்பத்திலிருந்து இவருடைய இன்ஸ்டாகிராம் ஐடி வெகு ஆக்டிவாகவே இருந்து வரும். அந்த வகையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகும் தான் எப்படி காதலில் விழுந்தேன் என்று தன்னுடைய ராஜா வெற்றி பிரபு மீது தனக்கு இருக்கும் காதல் குறித்தும் அவ்வப்போது போஸ்ட் போட்டுக் கொண்டிருப்பார்.
இந்த நிலையில் தற்போது தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். நாங்கள் கேரள முறைப்படி நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்தோம். அது ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் ரொம்பவே எதிர்பார்த்து ஆசைப்பட்டது தான். அதற்காக எனக்கு பிடித்த மாதிரியே ஆடையும் கிடைத்திருந்தது. ஆனால் இந்த புகைப்படங்களை ஆரம்பத்தில் வெளியிடவில்லை.
இப்போது தான் இதை வெளியிடுகிறோம் என்று கூறியிருக்கின்றனர். அதோடு தான் அன்று அணிந்திருந்த நகைகள் மற்றும் ஆடைகள் குறித்தும் தீபிகா உணர்வுபூர்வமாக அந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தீபிகா போஸ்டுக்கு ராஜா வெற்றி பிரபு, முதல் முறை நான் அவளை அந்த டிரஸ்ல பார்த்தேனோ அப்போவே பிளாட் ஆகிட்டே சார்.. அவ்ளோ அழகா வந்தா என்று காதலோடு கமெண்ட் தட்டி விட்டிருக்கிறார். அது இதுவரைக்கும் 1200க்கும் மேலே லைக் பெற்று இருக்கிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications