டாப் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை கௌதமி.. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா? அப்போ இனி கலக்கல் தான்
சென்னை: நடிகை கௌதமி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலில் முக்கியமான கேரக்டரில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இனி கௌதமியின் என்ட்ரியால் சீரியலில் பல சுவாரசியமான காட்சிகள் வர இருக்கிறது. அது எந்த சீரியல் என்று பார்க்கலாம்.
80ஸ் காலகட்டத்தில் தொடங்கி 90ஸ் காலகட்டத்தில் வரை பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌதமி அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி பிரபலங்களோடு நடித்த கௌதமி தமிழில் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் பல ஹிட்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கும் இவர் போட்ட குத்தாட்டம் எப்போதும் இவருடைய பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானது. அதிலும் சிக்கு புக்கு ரயிலு பாட்டு பலருடைய ஃபேவரைட். சமீபத்தில் கூட கங்குவா திரைப்படத்தின் பிரமோஷனின் போது நடிகர் கார்த்தி என்னுடைய அண்ணன் சூர்யாவிற்கு சிக்கு புக்கு ரயிலே பாடலில் வரும் நடிகை கௌதமியை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி இருந்தார்.
கௌதமி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அரசியலிலும் முக்கிய பிரபலமாக இருக்கிறார். சமீபத்தில் கூட அவருடைய வீடு முக்கிய பிரபலம் ஒருவரால் ஏமாற்றப்பட்ட நிலையில் அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். அதோடு கௌதமி பாபநாசம் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சின்ன திறையிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கிள்ளாதே என்று சீரியலில் இவர் கதாநாயகியின் அம்மாவாக அறிமுகம் ஆகிறார்.
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலான உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலின் ரீமேக் தான். இந்த சீரியலில் கதாநாயகியாக ரேஷ்மாவும், கதாநாயகனாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார்கள். இதில் கதாநாயகி மதுமிதாவின் அம்மாவாக கௌதமி அறிமுகமாகும் போது இந்த சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீ தமிழில் நல்ல டிஆர்பி பெற்று வரும் இந்த சீரியலில் இனி கௌவுதமியின் ரசிகர்களும் இந்த சீரியலை விரும்பி பார்ப்பார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications