விஜயகாந்த் எங்க முதலாளி பட செட்டில் செய்த வேலை தெரியுமா? குழந்தை மனசு அவருக்கு? கண் கலங்கிய கஸ்தூரி
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி அவரோடு எங்க முதலாளி திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நடிகை கஸ்தூரி பல நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
வெளியே பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் விஜய்காந்த் சூட்டிங் ஸ்பாட்டில் குழந்தை போல விளையாடிக் கொண்டிருப்பார் என்று யாரும் அறியாத தகவல்களையும் கஸ்தூரி கூறியிருக்கிறார்.
அத்தோடு விஜயகாந்த் இன்னொரு பக்கத்தை கஸ்தூரி உடைத்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் "விஜயகாந்த்" இந்த பெயருக்கு பெரிய அளவில் முன்னுரை தேவையில்லை. 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகனாகவும், அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் தெரிந்த விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களை கண்ணீர் துயரத்தில் ஆழ்த்தி விட்டு விண்ணுலகம் சென்றிருந்தார்.
அவர் மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் குறித்து பல நடிகர் நடிகைகள் உருக்கமாக பேசி வருகிறார்கள். விஜயகாந்த்தின் நண்பர்களும், ரசிகர்களும் அவரோடு நடித்த நடிகர்களும் விஜயகாந்த் பற்றி பல தகவல்களை பேசி வரும் நிலையில் விஜயகாந்த் உடன் எங்க முதலாளி திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார்.
அதில் விஜயகாந்த் மாதிரி ஒரு ஆளை யாருமே பார்க்க முடியாது. எல்லாருமே சொல்லுவாங்க அவர் சாப்பாடு போட்டது பற்றி, ஆனா அவர் என்னெல்லாம் உதவி செஞ்சுருக்காருன்னு யாருக்குமே தெரியாது. அந்த அளவிற்கு செஞ்சுருக்காரு. நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே விஜயகாந்தின் தீவிரமான ரசிகை. அவர் நடிச்ச பல திரைப்படங்களை பார்த்து பிரமித்து போய் இருக்கிறேன்.
அந்த நேரத்தில் எனக்கு அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் நான் நினைக்கவே இல்ல. பிறகு நான் நடிக்க வந்த பிறகு ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் எனக்கு வந்தது. ஆனால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில்தான் எனக்கு எங்க முதலாளி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் நான் விஜயகாந்தை நேரிலேயே பார்த்தேன். பார்த்ததும் ரொம்பவே அதிசயப்பட்டு போனேன்.

இப்படி ஒரு மனிதரா என்று நினைத்திருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்மையில் அவர் ஒரு குழந்தை தான் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு சுறுசுறுப்பாகவும் விளையாட்டாகவும் வெகுளியாகவும் இருப்பார். வெளியே நான் அவரை ஒரு நடிகராக பார்த்து பிரமித்து இருந்த நிலையில் நிஜத்தில் பக்கத்தில் பார்க்கும்போது இவரா அவர் என்று நானே அதிசயப்பட்டு இருந்தேன். அந்த அளவிற்கு ஒரு ஜாலி ஆன நபர்.
அவரிடம் சூட்டிங் ஸ்பாட்டில் உதவிக்காக பல பேர் வந்து கொண்டே இருப்பார்கள். நாங்க அவருடன் இருக்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் அடிக்கடி போட்டிகள் எல்லாம் வைப்பாரு. யாரு நாளைக்கு சூட்டிங் சீக்கிரமா வராங்களோ அவங்களுக்கு பரிசு என்று சொல்லுவாரு. ஒவ்வொரு நாளும் அவர் தான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சீக்கிரமா வர்ற ஆளா இருப்பாரு.
நான் எப்படியாவது சீக்கிரமா போயிரும்னு காரில் கிளம்பினாலும் என் டிரைவர் கிட்ட அவர் எப்படியோ ரகசியமா சொல்லி வச்சிட்டு அவர் முன்னாடி போய் சேர்ந்திடுவாரு. இது பலமுறை நடந்திருக்கு. ஒரு முறை காரைக்குடிக்கு சூட்டிங் போயிருந்தோம். அது ஒரு பெரிய வீடு அந்த வீட்டில் நைட்டு சூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கும்போது திடீர்னு கரண்ட் கட் ஆயிட்டு. அப்போ கொஞ்ச நேரத்துல ஒரு சத்தம் கேட்குது..
அது விஜயகாந்த் சார்தான்.. நான் இல்ல... நான் இல்ல... நான் வெளியே வந்துட்டேன்னு அவர் கத்திட்டு இருக்காரு.. அப்ப முதலில் யாருக்கும் புரியல, அதுக்கப்புறம் தான் புரியுது கரண்ட் இல்ல இருட்டா இருக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சுன்னா அதுக்கு நான் காரணம் இல்லை என்று அவர் வெளியே நின்று கிண்டல் பண்ணிட்டு இருக்காரு. ஆனா உண்மையில் விஜயகாந்த் சார் செட்டில் அப்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காது. அது எல்லாருக்கும் தெரியும்.

ஆனா இவரு விளையாட்டா அப்படி பேசிட்டு இருந்தது என்னால மறக்கவே முடியாது. விஜயகாந்த் சார் பாக்குறதுக்கு தான் கருப்பா இருப்பார். அவருடைய மனசு வெள்ளை. அவரோட கை சிவப்பா இருக்கும்.. கொடுத்து கொடுத்து செவந்து போன கைனு சொல்லுவாங்களே அந்த மாதிரி தான் விஜயகாந்த் சார்.
அவர் பற்றிய நினைவுகள் எனக்கு நிறைய இருக்கு, ஆனா அதற்குப் பிறகு பல படங்களில் நான் அவரோட நடிக்கணும் என்று நினைத்தேன். எனக்கு அதுக்கான வாய்ப்பு சரியா அமையாமல் போயிடுச்சு என்று அந்த பேட்டியில் கண் கலங்கி உருக்கமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications