பச்ச குழந்தை.. 11 வயசு தான்.. இப்படி பண்ணிட்டாங்களே.. அதனால் தான் அப்படி- லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: நடிகையாகவும், இயக்குனராகவும் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சின்னத்திரையில் பிரபலம் அடைந்தது சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்தும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் தற்போது பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் சிலர் சமூகத்தில் பொறுப்பில்லாமல் செய்யும் செயல் வேதனை அளிக்கிறது. என்னுடைய நிகழ்ச்சியில் 11 வயது குழந்தை தான் பட்ட கஷ்டத்தை சொன்னதைக் கூட பலர் அபத்தமாக கலாய்த்து ட்ரோல் செய்து வைத்திருந்தனர் என்று அது குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக அவரது அறிமுகம் மலையாளத்தில் இருந்தாலும் தமிழில் நாவல் ,பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து எல்லாம் அவன் செயல், பாஸ் என்ற பாஸ்கரன், விண்ணைத்தாண்டி வருவாயா, நான் மகானல்ல, உட்பட 30 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் .இயக்குனர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காகவே மொட்டை அடித்துக்கொண்டு நடித்திருந்தார்.
தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அவர் செய்த இந்த செயல் அந்த நேரத்தில் பலரால் பாராட்டப்பட்டது. அவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது. தன்னுள் இருக்கும் இயக்குனர் திறமைக்கும் வேலை கொடுக்கும் பொருட்டு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, வீட்டுஉரிமையாளர்,அம்மானி போண்ற நான்கு படங்களை இயக்கியுள்ளார்.
பல படங்கள் நடித்திருந்தாலும், சில படங்களை இயக்கியிருந்தாலும்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலத்தை பெற்றிருந்தார்.பிற குடும்பங்களின் பிரச்சனைகளை பொது வெளியில் பேசுவது குறித்து பல விமர்சனங்களை இவர் சந்தித்து வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மூலம் ஒரு குடும்ப பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை கூறிக்கொண்டு நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை குறித்து வரும் பல கலாய்ப்புகளையும் மீம்ஸ் கண்டெண்டுகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் சமூக பிரச்சினைகளுக்கு தேவையான போது தன் குரலை கொடுத்து வந்தார்.இந்த நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தான் தொகுத்து வழங்கும் போது ஏற்பட்ட மன கஷ்டங்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதில் பெண்கள் பல இடங்களில் அவமானப்பட்டு கொண்டுதான் இருக்க வேண்டியது இருக்கிறது. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒரு 11 வயது குழந்தை அவருடைய அம்மாவோடு கலந்து கொண்டிருந்தார். அந்த பச்ச குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து அவர் பேசியிருந்தார். ஆனால் அதையும் சிலர் ட்ரோல் செய்து வெளியிட்டு இருந்தனர்.
அதுவெல்லாம் எவ்வளவு பெரிய கேவலமான செயல். நான் தொகுப்பாளர் அதனால் என்னை வேணும் என்றால் எப்படி வேணாலும் ட்ரோல் செய்துவிட்டு போகட்டும். ஆனால் 11 வயதில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர அந்த குழந்தையை வைத்தும் அவருடைய அம்மாவை வைத்தும் ட்ரோல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். இதுவெல்லாம் எவ்வளவு மோசமான செயல்.
எனக்கு என்னுடைய கணவருடைய சப்போர்ட் இருக்கிறது. குடும்பத்தினரின் சப்போர்ட் இருக்கிறது ஆனால் இது போன்ற எந்த சப்போர்டும் இல்லாமல் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையும் இந்த மாதிரி சிலர் செய்யும் செயல்களால் வெளியே வருவதற்கே பயப்படுகிறார்கள். தாங்கள் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்ல கூட துணிவு வருவதில்லை என்று அந்த பேட்டியில் தன்னுடைய கருத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு தனக்கும் தன்னைப்போல தொகுப்பாளர்களாக இருப்பவர்களுக்கும் நடக்கும் அவலங்களை குறித்து தான் என்னுடைய ஒரு திரைப்படத்தில் கூட நான் சில காட்சிகளை வைத்திருந்தேன். நான் இயக்கியும் அந்த திரைப்படத்தில் நடித்தும் இருந்ததால் அந்த காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தது. ஒரு நிகழ்ச்சி எங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நாங்கள் தொகுத்து வழங்கவில்லை என்று சொன்னால் என்ன மாதிரி பிரச்சனைகள் வருகிறது என்பதை அந்த திரைப்படத்தில் நான் காட்டி இருந்தேன் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications