மகாலட்சுமி வெளியிட்ட பதிவு.. உண்மையை இப்படி உளறிட்டீங்களே.!! கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தன்னுடைய கணவருக்காக வெளியிட்ட பதிவு ரசிகர்களை கலாய்க்க வைத்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் இப்படியா செய்வீங்க.!!?? என்று 90ஸ் கிட்ஸ்கள் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
காதல் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மகாலட்சுமி அதற்கு கொடுத்த கேப்ஷன் தான் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளதாம்.

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்
சமூக வலைதளமே சில நாட்கள் மிரண்டு போகும் வகையில் பரபரப்பை ஏற்படுத்திய சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணம் தான். இவர்கள் திருமணத்திற்கு பிறகு செய்யும் சிறு சிறு விஷயங்களும் ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பலர் இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை பார்த்து பொறாமையில் பொசுங்கி வரும் நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு எப்போதும் போல வாழ்த்துக்களை குவித்து தான் வருகிறார்கள்.

இதை நினைத்துப் பார்க்கவில்லையே
யார் எப்போது பிரபலமாவார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அது தற்போது ரவீந்தர் மகாலட்சுமி விஷயத்தில் நடந்திருக்கிறது. இவர்கள் இருவரும் தங்களுடைய திருமணம் இந்த அளவிற்கு பேசப்படும் பொருளாக இருக்கும் என்பதை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அனைவரையும் போல சாதாரணமாக திருமணத்தை செய்து கொண்ட இவர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் கிடைக்க வரவேற்பு தான் அமோகம். அதனாலே பலர் இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.

பரபரப்புக்கு பிடித்துப் போனவர்
சீரியலில் நடித்து வந்தாலும் பரபரப்புக்கு எப்போதுமே பிடித்துப் போன நபராகத்தான் மகாலட்சுமி இருந்து வருகிறார். ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் இவருடைய பெயர் அடிக்கடி அடிபட்டுக் கொண்டே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் இரண்டாவது திருமணம் செய்து இருப்பது இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. காரணம் இவர் திருமணம் செய்திருந்த ரவீந்தர் இவருக்கு பொருத்தம் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது. காதலித்து திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி இவர்களின் மட்டமான கருத்துக்களையும் கமெண்ட்களையும் கண்டு கொள்வதே கிடையாதாம்.

இது என்ன கேப்ஷன்
திருமணத்திற்குப் பிறகு வழக்கம் போல மகாலட்சுமி அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சூட்டிங் இல்லாத நேரங்களில் தன்னுடைய கணவரோடு வெளியிடங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர்களுக்கு ரிசப்ஷன் எப்போது என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு விரைவில் யோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ரவீந்தர் கூறியிருந்தார்.ஆனால் தற்போது ரிசப்ஷன் உடையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் லேட்டஸ்ட் ஆக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்தர் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் தற்போது தான் மகாலட்சுமி இந்த புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு, "நீங்கள் கொடுத்த புன்னகையை நான் அணிந்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகிறார்கள். காரணம் மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று ஆரம்பத்தில் இருந்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தனக்கு பொன், பொருள் தேவை இல்லை தன்னுடைய கணவரின் சிரிப்பு மட்டும் போதும் என்று இவர் அனைவருக்கும் புரிய வைத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications