மகாலட்சுமி ஏன் இப்படி பண்ணுனாங்க? இணையத்தில் வெளியான நெருக்கமான புகைப்படம்.. ரசிகர்களின் அறிவுரை
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த மகாலட்சுமி தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
மகாலட்சுமி கணவரான ரவீந்தர் தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே சமூக வலைதளத்தில் இவர்களைப் பற்றி தான் பலரும் புலம்பிக் கொண்டிருக்கும்போது இப்படி பண்ணலாமா என ரசிகர்கள் அறிவுரை கூறி வருகிறார்கள்.

மகாலட்சுமியின் திடீர் திருமணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வாசுகி கேரக்டரில் நடித்து வரும் மகாலட்சுமி பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அவர் தற்போது திடீரென்று இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது திருமணம் பலரையும் வியப்புக்குள் ஆழ்த்தி இருந்தது. காரணம் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்திருந்தது தான். 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் தொகுப்பாளராக இருந்த மகாலட்சுமி இவருக்கு கொஞ்சம் கூட அழகில் பொருத்தம் இல்லாத ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் தங்களுடைய கவலைகளை கமாண்டுகளில் கொட்டி வந்தனர்.

சமூக வலைத்தளத்தை கலக்கும் செய்தி
காதலுக்கு பணமும் அழகும் தேவையில்லை என்று இவர்களுடைய திருமணத்தை வைத்து பலர் மீம்ஸ்களாக சமூக வலைத்தளத்தில் பறக்கவிட்டு வந்தனர். தங்களுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை என்று ஏக்கத்தில் இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமணம் அவர்களுக்கு சிறு ஆறுதல்களை கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர். ஆனால் மகாலட்சுமியின் தீவிரமான ரசிகர்கள் பலர் இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திருமணம் முடிந்து ஒரு சில வாரங்கள் கடைந்த நிலையில் இவர்கள் செய்தி இன்னும் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

குதர்க்கமான போட்டோஸ்
சமூக வலைத்தளத்தில் தற்போது மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி முகசூழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டிற்குள் பண்ணுவதை எல்லாம் இப்படியா சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்க பர்சனலை உங்களோட வச்சுக்கோங்க, இந்த போட்டோ போட்டு சிங்கிள்ஸை வெறுப்பு ஏத்தாதீங்க! என்று ஒரு ரசிகர் ஆதங்கத்தோடு இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் மகாலட்சுமி ரவீந்திரருடைய கன்னத்தில் முத்தம் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் கடவுளே உனக்கு கண் இல்லையா? என்று கருத்து பதிவிட்டு இருக்கிறார். அதற்கு இன்னொரு ரசிகர் கண்ணு இருக்கிறதோ இல்லையோ மனசு இருக்கிறது என்று பதில் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கருத்து மோதல்கள்
மகாலட்சுமியின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் அவரைப் பற்றிய பேச்சுகள் மட்டும் சமூக வலைத்தளத்தில் ஓய்ந்த பாடு இல்லை. அதில் தற்போது இந்த மாதிரி நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு மேலும் நெட்டிசன்கள் கலாய்ப்பதற்கு ஏதுவாக எப்படி எல்லாம் செய்ய வேண்டுமா? என்று சில நலம் விரும்பிகள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சிலர் யார் எப்படி நினைத்துக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை இவர்கள் இப்படி காட்டி வருகிறார்கள். அடுத்தவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது ஏன் உங்களுக்கு எரிகிறது என்று ரசிகர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications