13 வயதில் நான் எடுத்த தவறான முடிவு.. என் வாழ்க்கையே மாற்றி விட்டது! நடிகை மோகினி உருக்கம்! பலருக்கு பாடம்
சென்னை: தமிழ் சினிமாவின் 90களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவரான (Actress Mohini) மோகினி சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான திருப்பங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். குறிப்பாக 13 வயதில் எடுத்த ஒரு முடிவு தனது வாழ்க்கையின் பாதையை முழுவதுமாக மாற்றிவிட்டதாக அவர் கூறியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

வாழ்க்கையை மாற்றிய முடிவு
டான்ஸ் கிளாஸ்க்கு சென்று கொண்டிருந்த காலத்தில் தான் இந்த மாற்றம் தொடங்கியதாக நடிகை மோகினி தெரிவித்துள்ளார். அப்போது கோடை மழை படத்தின் மூலம் பிரபலமான நடிகை வித்யா அதே டான்ஸ் கிளாஸ்ஸில் கற்றுக்கொண்டிருந்தாராம். கோடை மழை படம் கமிட்டான பிறகு ஒரு நாள் முழு மேக்கப்புடன் - லிப்ஸ்டிக் போட்டு முகம் பளிச்சென - கிளாஸ்க்கு வந்ததை பார்த்ததும் தானும் இப்படியே நடிகையாகி பிரபலமாக வேண்டும் என்ற ஆசை வந்ததாக மோகினி கூறியுள்ளார்.
அந்த ஒரு ஆசை தான் படிப்பை விட்டுவிட்டு சினிமாவுக்குள் வர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதாகவும், சினிமாவில் வாய்ப்பு கிடைத்தபோது அதை பெருமையாக தோழிகளிடம் கூறியதாகவும் அவர் நினைவுகூர்கிறார்.
ஆனால் அந்த நேரத்தில் படிப்பை தொடர்ந்து இருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற உணர்வு இன்று வருகிறது என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மோகினி பேட்டி
"அப்போ நமக்கு பிரபலம் வேண்டும் என்பதுதான் முக்கியம். வாழ்க்கைக்கு எது முக்கியம் என்று யோசிக்கவே இல்லை. படிப்பு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்று இப்போது புரிகிறது" என மோகினி பேசி இருக்கிறார்.
மயக்கும் கண்கள்
சின்ன வயதிலேயே தனது கண்கள் குறித்து பலரும் பாராட்டியதால் கவனம் கிடைத்தது... அதனால் இன்னும் பெரிய பிரபலம் பெற வேண்டும் என்ற ஆசை உருவானது... சினிமாவில் நல்ல வரவேற்பும் கிடைத்தது... ஆனால் அது நிரந்தரமில்லை என்பதை காலம் உணர்த்தியது என்றும் மோகினி கூறியுள்ளார்.
இன்றைய சமூக வலைதளங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விரைவான புகழை தேடி ரீல்ஸ், வீடியோக்கள் மூலம் படிப்பை புறக்கணிக்கும் நிலையை பார்க்கும்போது மோகினியின் வாழ்க்கை இவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோகினி நடித்த படங்கள்
90களில் குடும்ப மற்றும் காதல் கதைகளில் மென்மையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மோகினி ஈரமான ரோஜாவே, புதிய மன்னர்கள், உடன்பிறப்பு, நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற பல படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் தனது தடத்தை பதித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய மோகினியின் இந்த பேட்டி... பிரபலத்தை விட கல்வி முக்கியம்... வாழ்க்கையில் நிலைத்திருக்க அடித்தளம் தேவை... என்ற ஒரு அனுபவ குரலாக பார்க்கப்படுகிறது.
பலருக்கும் பாடம்
13 வயதில் எடுத்த ஒரு முடிவு வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்த நடிகை மோகினியின் இந்த பேட்டி... இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு முக்கியமான பாடமாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
நடிகை ஸ்வாசிகா கணவர் பற்றி சொன்ன வார்த்தை.. மலையாள ரசிகர்கள் கோபம்? ஆனால் நெட்டிசன்கள் சப்போர்ட் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications