ராமராஜனோடு,நளினி ஓடிப்போய் "கல்யாணம்”.. நடிகர் சுரேஷ் செய்த வில்லத்தனம்.. நிழல்கள் ரவியா இப்படி?
சென்னை: வெள்ளி திரையிலும், சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வரும் நடிகை நளினி ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் தெரிந்ததுதான்.
நடிகை நளினி மற்றும் ராமராஜன் சில வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் நளினி, ராமராஜனை எதற்காக திருமணம் செய்து கொண்டேன் என்றும் அப்போது நடிகர் சுரேஷ் என்ன செய்தார் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
வெள்ளித்திரையில் அதுவும் ஒரு வருடத்திற்கு தமிழில் மட்டுமே 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நளினி. இவர் முன்னணி நடிகர்களின் அனைவரோடும் ஜோடியாகவும் நடித்து இருக்கிறார். ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போதே பல திரைப்படங்களில் நளினி நடித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இவரது 21 வது வயதுக்குள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பழமொழிகளிலும் அதிகபட்சமாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த முன்னணி நடிகையாக இருந்த நளினி அந்த நேரத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த ராமராஜனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவருடைய திருமணத்திற்கு ஆரம்பத்தில் இரண்டு வீட்டாரும் சம்மதிக்காமல் இருந்தனர்.
அதுவும் நளினியின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதை எல்லாம் உடைத்து சூட்டிங் போன இடத்தில் இருந்து ஓடிப்போய் தான் நளினி ராமராஜனை காதல் திருமணம் செய்திருந்தார். திருமணத்தின் போது அதிக அளவில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டாலும் பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்களாக இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தான் போய்க் கொண்டிருந்தது.

பிறகு ஜோசியத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்று சொன்ன காரணத்தினால் நாங்கள் செய்து கொண்டோம் என்று நளினி கூறியிருக்கிறார். அதுபோல தாங்கள் விவாகரத்து செய்திருந்தாலும் நான் இப்போதும் ராமராஜனை காதலித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எழுதிய காதல் கடிதங்களை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன் என்றும் நளினி கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியில் 80ஸ் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் நடிகை நளினியும் கலந்து கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் நளினியை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று திரைப்படங்களில் நளினி நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல ஒரு வருடத்தில் 23, 24 படங்கள் வெளியாகி இருக்கிறது என்றும் கூறினார்.
அதற்கு பிரியங்கா மேடம் அப்போ நீங்க தூக்கம் சாப்பாடு எல்லாம் எப்படி என்று கேட்க, அதுக்காகத்தான் நான் கல்யாணமே பண்ணிக்கிட்டது. நல்லா தூங்கணும் நல்ல சாப்பிடனும் என்பதற்காகத்தான் நான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி சிரிக்கின்றனர். அதற்கு இது உண்மைதான். அதுபோல நாங்க ஓடி போற அன்னைக்கு நானும் சுரேஷ் அண்ணனும் தான் நடிச்சுக்கிட்டு இருந்தோம். அப்போ ராமராஜன் அங்க வந்துட்டாரு. நான் அப்போ அண்ணா நான் இன்னைக்கு ஓடிப்போக போறேன் என்று சொல்கிறேன்.

அதற்கு ஐயோ நீ ஓடி போனா உங்க அம்மா என்கிட்ட கேப்பாங்க. உங்க அம்மாக்கு போன் பண்ணி சொல்லி கொடுத்துருக்தேன். உங்க அம்மா என்னை நம்பி தான் உன்ன விட்டுட்டு பேயிருக்காங்க என்று சொல்லி, அண்ணன் என்னை அன்னைக்கு விடவே இல்லை. என்னை பிடித்து வைத்து விட்டார் என்று சொல்லி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ராமராஜன் ஒரு நல்ல ஒர்க்கர். அவர் தெரியாமல் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு என்று சொல்ல, அதற்கு சுரேஷ் இவங்க ரெண்டு பேருமே தங்கமானவங்க ஆனா ஏதோ மேட்ச் ஆகல என்று சொல்ல, அதற்கு நளினி நான் இப்போதும் அவர காதலிக்கிறேன் என்று சொல்ல, அதற்கு பிரியங்கா ராமராஜன் சார் இவங்க உங்களை லவ் பண்றாங்களாம் என்று சொல்ல, இது அவங்களுக்கும் தெரியும் என்று நளினி சொல்லி இருக்கிறார்.
அதோடு நளினி நாங்க லவ் பண்ணிக்கிட்டு இருக்கிற விஷயம் எங்க வீட்டில தெரிஞ்சதும் நான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும்போது எங்க அண்ணி ரெண்டு பேரு என் கூடவே வருவாங்க. அப்பவும் கூட ரவி சார் தான் (நடிகர் நிழல்கள் ரவி) எனக்கு ராமராஜன் கொடுக்கும் லவ் லெட்டரை வாங்கிக் கொண்டு வந்து தருவார். அதெல்லாம் மறக்க முடியாதது என்று நெகிழ்ச்சியோடு மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்து இருக்கிறார்.
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications