ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் மீண்டும் ஒரு சர்ச்சையின் மையமாகி இருக்கிறார். இந்த முறை அவர் போட்ட ஒரு சின்ன சமூக வலைதள பதிவு தான் பெரிய விவாதமாக மாறி வருகிறது.
சமீபத்தில் அவர் போட்ட பதிவில், ஐடி விங் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுறதோடு, ஒருவரை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல்கள் கூட அதிகமாகி வருது என்று நேராக கூறியிருந்தார். அதே சமயம், "இதற்கான பொறுப்பு தலைவருக்கே... வழிநடத்தும் விதம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இல்ல... தேர்தல் நேரம் வர்றதால இப்படி இன்னும் மோசமா போகுது"ன்னு சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகள் தான் இப்போ அரசியல் வட்டாரத்திலும், இணையத்திலும் சூடான பேச்சாகி இருக்கு.

நிவேதா பெத்துராஜ் கோபமான பதிவு
இந்த பதிவு வெளியானதும், "யாரை குறிவைத்து இப்படி சொன்னார்?"ன்னு எல்லாரும் கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. சிலர் இது ரொம்ப தைரியமான கருத்து என்று பாராட்டுறாங்க... இன்னொரு பக்கம், தேவையில்லாம அரசியல் விஷயத்துல குதிக்கறாங்கன்னு விமர்சனமும் வருகிறது.
ரசிகர்கள் கருத்து
இதுவும் நிவேதா பெத்துராஜ்க்கு புதிய விஷயம் கிடையாது. முன்பே பல பேட்டிகளில் அவர் "எனக்கு தோண்றது தான் பேசுவேன்... யாரையும் மகிழ்விக்க பேச மாட்டேன்"ன்னு வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அந்த பழைய பேட்டிகள் கூட இப்போ மீண்டும் வைரலாகி, "அவர் எப்பவும் இப்படித்தான் நேராக பேசுவார்"ன்னு ரசிகர்கள் பேசிக்கிட்டு இருக்காங்க.
அதேபோல், சினிமா வாய்ப்புகள் எப்படி கிடைக்குது, துறையிலுள்ள அரசியல் எப்படி நடக்குது போன்ற விஷயங்களையும் முன்பு அவர் வெளிப்படையாக பேசினதால சில சர்ச்சைகளும் எழுந்தது. சமூக வலைதளத்திலும் அவர் போட்ட சில பதிவுகள் முன்பே விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் காரணமாயிருக்கிறது.
குவிக்கும் கமெண்ட்ஸ்
இப்போ வந்த இந்த புதிய கருத்து காரணமாக ரசிகர்கள் இரண்டாகப் பிளந்திருக்காங்க. ஒரு பக்கம் "நேர்மையான பேச்சு... யாருக்கும் பயப்படாமல் சொல்றாங்க"ன்னு ஆதரவு. இன்னொரு பக்கம் "அரசியல் நோக்கத்துடன் பேசுறாங்க"ன்னு எதிர்ப்பு.
நிவேதா யார்?
நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல நடிகை. ஒரு நாள் கூத்து, டிக்டிக் டிக் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர். தனது வெளிப்படையான கருத்துகளுக்காகவும் இவர் அடிக்கடி பேசுபொருளாகி வருகிறார்.
மொத்தத்தில், நிவேதா பெத்துராஜ் போட்ட இந்த ஒரு பதிவு சாதாரண ட்வீட் இல்ல... பெரிய அளவிலான விவாதத்தை தூண்டி இருக்கு. இனிமேல் அவர் இதைப் பற்றி மேலும் பேசுவாரா... இல்லையெனில் இந்த சர்ச்சை இன்னும் பெருசா போகுமா என்பதுதான் இப்போ எல்லாரும் கவனிக்கிற விஷயம்.
-
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
சாக கிடந்தப்ப மகளுக்காக பாலா செஞ்ச காரியம்.. 10 வருட டார்ச்சர், தற்கொலை எச்சரிக்கை! அரண்ட கோலிவுட் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications