விஜய் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்? காரணம் இதுவா? எதிர்பாராத கிளைமாக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியல் நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் அடுத்த வாரத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

கிழக்கு வாசல் சீரியல் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் தான் தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள் இந்த சீரியல் முடிக்கப்படுவதால் இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

actress Radhika s Radan Company kizhakku vasal serial is climax episode

அந்த வகையில் நடிகை ராதிகாவின் சொந்த நிறுவனமான ராடன் நிறுவனத்தின் மூலமாக பல சீரியல்கள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகி இருக்கிறது. அதிலும் சித்தி, அண்ணாமலை போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்தது. அதைத்தொடர்ந்து பல சீரியல்கள் இப்போது ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் விஜய் டிவியில் கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டு முதல் "கிழக்கு வாசல் சீரியல்" ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருந்தது. காரணம் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நடிக்கிறார். அதுபோல ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த ரேஷ்மா கதாநாயகியாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர் சீசன் ஒன்றில் நடித்த நடிகர் வெங்கட் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் பல சீரியல் நடிகர் நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருக்கிறது. இந்த சீரியலின் கதையில் விறுவிறுப்பு இருந்தாலும் திடீரென்று இந்த சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே சில மாதங்களாகவே இந்த சீரியலில் கதாநாயகி ரேஷ்மாவை காணவில்லை. அதுபோல சீரியலில் இப்போது கதாநாயகன் வெங்கட் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சண்முகம் ரேணுவை காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்களுடைய காதலை உணர்ந்த நேரத்தில் ரேணுவின் தங்கை அனு தான் சண்முகத்தை காதலிக்கிறேன் என்று சொன்னதால் ரேணு தன்னுடைய தங்கைக்காக சண்முகத்தை விட்டுக் கொடுத்திருந்தார்.

அதற்கு பிறகு சண்முகத்திற்கும் அனுமீது ஒருவித ஈர்ப்பு உண்டாகி இருந்தது. இந்த நிலையில் இப்போது புதியதாக பல சிக்கல்களும் வந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் வரும் வாரத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் சீரியலில் கதாநாயகி இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாலும் புதிய சீரியல்கள் வந்திருப்பதாலும் இந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதால் பெரிய அளவில் டிஆர்பி கிடைக்காமல் இருப்பதால் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

அதுபோல இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது படிக்க வேண்டும் என்பதற்காக வெளியூருக்கு போயிருக்கும் ரேணு இனி இறந்து போவது போன்றும், அணுவிற்கு ரேனு தன்னுடைய அக்கா என்ற உண்மை தெரிய வந்த பிறகு சண்முகத்திற்கும் அனுவிற்கும் திருமணம் நடக்கலாம்.. அதுபோல ஜெயிலில் இருக்கும் இன்னொரு சண்முகமும் வெளியே வந்து அவருடைய மனைவியோடு சேர்ந்து வாழ்வது போன்று சீரியல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+