தமன்னாவால் கணவரோடு நடந்த சண்டை.. அவரை இப்போ ஃபாலோ பண்ணல.. வெளிப்படையாக பேசிய ரம்பா
சென்னை: நடிகை ரம்பா தன்னுடைய கணவரை தான் இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணாத காரணம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதோடு தன்னுடைய கணவரோடு பிரச்சனை ஏற்படுவதற்கு நடிகை தமன்னா தான் காரணம் என்று ரம்பா பேசியிருக்கும் நிலையில் இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவரான ரம்பா தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். சொந்தமாக பிசினஸ் நடத்தி வருகிறார். ஆனாலும் தன்னுடைய கணவரோடு வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கிறார். சினிமாவை விட்டு விலகிய ரம்பா சமீபத்தில் கோயம்புத்தூரில் கிச்சன் பிசினஸ் தொடங்கி இருக்கிறார். தன்னுடைய இரண்டாவது கிளையை தொடங்கி இருக்கும் அவர் நேரடியாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

ஏற்கனவே முதல் பிரான்ச் தொடங்கும் போது ரம்பா தன்னால் வர முடியவில்லை என்று அதனால் இரண்டாவது பிரான்ச் தொடங்கும் போது தான் வந்து விட்டேன் என்றும் கூறியிருந்தார். அதோடு தனக்கு வாழ்க்கை தொடங்கியது கோயம்புத்தூரில் தான் என்றும் தன்னுடைய முதல் படத்தில் சூட்டின் கோயம்புத்தூரில் தான் நடந்தது, தனக்கு சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்தது என்றும் கூறினார். இப்போது தன்னுடைய பிசினஸ் கோயம்புத்தூரில் தொடங்கி இருப்பது தனக்கு சந்தோஷம் என்றும் இங்கு உள்ள மக்கள் தன்னிடம் நன்றாக பாசம் காட்டுகிறார்கள் என்றும் பேட்டியில் ரம்பா பேசியிருந்தார்.
அது போல தான் இப்போது அதிகமாக திரைப்படங்களில் நடிக்காத காரணம் குறித்தும் பேசி இருந்தார். அதாவது முன் போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் வருவது குறைந்து விட்டது..., பாகுபலி படத்திற்கு பிறகு நான் எந்த படத்தையும் விரும்பி பார்க்கவில்லை. எந்த படத்திலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட படங்களில் நான் நடித்தால் என்னுடைய குழந்தைகள் கூட அந்த படத்தை பார்க்க மாட்டாங்க.

அதனால் தான் நான் சினிமாவில் இப்போது நடிக்கவில்லை என்றும் பேசி இருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வழக்கம் போல ரம்பா தன் குடும்பத்தோடு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட அவருடைய மகள் ஸ்கூல் மற்றும் கல்லூரிக்கு தன்னுடைய கணவர் குழந்தைகளோடு விசிட் அடித்திருக்கிறார். அப்போது எடுத்த வீடியோக்களும் இணையத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் அதுவும் பலருடைய பாராட்டுகளை பெற்று வந்தது.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக ரம்பா பேசியிருக்கிறார். அதாவது நான் என்னுடைய கணவரை இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணவில்லை. அதற்கு காரணம் அவர் instagram ஓபன் செய்ததும் முதல் முதலாக நடிகை தமன்னாவை பாலோ செய்து விட்டார். என்னுடைய கணவர் என்னை தானே பாலோ பண்ண வேண்டும். உலகத்தில் உள்ள பலர் என்னை பாலோ பண்ணுகிறார்கள், ஆனால் அவர் முதல் முதலில் தமன்னாவை பாலோ செய்தார்.

அதனால் எனக்கு கோபம் வந்துவிட்டது அதனால் நான் அவரை அன்பாலோ செய்து விட்டேன். அவரிடம் சொல்லவும் செய்தேன்... நீங்கள் என்னை தான் முதலில் பாலோ பண்ண வேண்டும் என்று சொன்னேன். அவர் கேட்கவில்லை அதனால் நான் இன்னும் அவரை பாலோ செய்யவில்லை. அவர்தான் என்னை இன்ஸ்டாவில் பாலோ செய்து கொண்டிருக்கிறார்.

என்னுடைய கணவர் எனக்கு மட்டும்தான் என்று நான் ரொம்பவே நினைக்கிற ஆளு. என்னுடைய உரிமையை நான் இன்னொருவரிடம் எதிர்பார்க்க முடியாது, என் கணவரிடம் மட்டும்தான் நான் என்னுடைய உரிமையை எதிர்பார்க்கிறேன் என்று ரம்பா பேசியிருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகை ரம்பா தமிழில் காதலா காதலா, விஐபி, அருணாச்சலம், த்ரீ ரோசஸ், குங்குமபொட்டு கவுண்டர், பூமகள் ஊர்வலம், உள்ளத்தை அள்ளித்தா என்று பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜானகிராமன், ஆனந்தம், சுதந்திரம், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன் என பல வெற்றி திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் தான் ரம்பா விஜயவாடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரம்பாவிற்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அதுவும் குறிப்பாக மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன் போன்ற பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு இருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications