தல வழியில் ரம்யா பாண்டியன்.. இந்த ஷூட்டை தாங்குவார்களா?? ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:ரம்யா பாண்டியனின் புது அவதாரத்தை பார்த்து ரசிகர்கள் மெர்சல் ஆகியுள்ளனர். திடீரென்று துப்பாக்கியும் கையுமாக ரம்யா பாண்டியன் இன்ஸ்டா போஸ்டை பார்த்தவர்கள் ஏதேனும் ஆக்சன் படத்துக்கு கமிட் ஆகி இருப்பாரோ!? என்று யோசித்து வருகின்றனர்.

நடிகர் அஜித்குமாரை போல் இவரும் தற்பொழுது துப்பாக்கி சுடுவதை தன்னுடைய புது ஃபேஷன் என கூறியுள்ளார்.எனவே இனிமேல் துப்பாக்கி சூடுதல் போட்டி நடக்கும் மைதானங்களில் ரம்யா பாண்டியனை அடிக்கடி காணலாம்.

இடுப்பழகி தான்

இடுப்பழகி தான்

இடுப்பை காட்டி பேமஸ் ஆனாலும் இப்போது சிரிப்பை காட்டி வேற லெவலில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன். இவரைப் பார்த்து போட்டோஷூட் எடுக்கவேண்டும் என்றால் ரொம்பவே மெனக்கெடவோ மேக்கப் போடவோ வேண்டாம். இந்த மாதிரி சிம்பலா வந்தாளே ரசிகர்களுக்கு பிடித்து விடும் என்று பல நடிகைகளும் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எத்தனை பேர் இவரை காப்பி செய்து போட்டோ சூட் எடுத்தாலும் இவருடைய இடத்துக்கு யாராலயும் வர முடியாது என்பதை மேலும் மேலும் நிரூபித்து வந்து கொண்டிருக்கின்றார்.

போட்டோஷுட் ரம்யா பாண்டியன்

போட்டோஷுட் ரம்யா பாண்டியன்

அழகான விதவிதமான தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து போட்டோ ஷூட் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது துப்பாக்கி சூட்டை நோக்கி தனது கவனத்தை திருப்பி உள்ளதை பார்த்த ரசிகர்கள், முன்பை போல் தங்களுடைய போஸ்ட்கள் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெறுவதில்லை என்றும், உங்களுக்கு இருக்கும் திறமைக்கு குறைந்தது 30 படங்களாவது கதாநாயகியாக நடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம் அதுவும் நடக்கவில்லை.எனவே உங்க ஃபுல் ஃபோக்கஸ சினிமா பக்கம் கொஞ்சம் திருப்புங்க என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

புகழ் திருமணத்தில் ஆப்சென்ட்

புகழ் திருமணத்தில் ஆப்சென்ட்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் சில ரியாலிட்டி ஷோக்களில் புகழ் உடன் இணைந்து ரம்யா பாண்டியன் பெர்பாமன்ஸ் செய்திருந்தார். ரசிகர்களிடையே அது நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது நல்ல நண்பர்களாக புகழ், ரம்யா பாண்டியன் இருந்து வந்த நிலையில், புகழின் திருமணத்திற்கு கூட ரம்யா பாண்டியன் கலந்து கொள்ளவில்லை.கொஞ்ச நாட்களாக தஞ்சாவூர் திருச்சி பக்கம் மையம் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது அங்கிருந்து சில வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பேஜ்ஜில் அப்லோட் செய்து வருகிறார்.

புது பேஷனான துப்பாக்கிச் சூடு

புது பேஷனான துப்பாக்கிச் சூடு

புதுக்கோட்டையில் இருக்கும் ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் துப்பாக்கிச் சூடும் கிளப்பிற்கு சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன். இயல்பிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட ரம்யா பாண்டியன் துப்பாக்கியை பார்த்ததும் சுடுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நேஷனல் ஷூட்டர் ராஜசேகர பாண்டியன் ட்ரெய்னிங்கில் சூட் செய்து பழகிய போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்துள்ளார். ஒருமுறை பயிற்சி எடுத்ததிலே துப்பாக்கி சுடுவதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டு விட்டதாகவும் சென்னைக்கு சென்ற பின்பும் இது தொடரும் என்றும் தன் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+