சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ தங்கச்சி யார் தெரியுமா? இந்த பிரபலம் தான்! லீக்கான புகைப்படம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மா அருண் தன்னுடைய சகோதரியுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய குடும்பத்தை சோசியல் மீடியாவில் இதுவரைக்கும் காட்டாமல் இருந்த நிலையில் இப்போது முதல் முறையாக தன்னுடைய சகோதரியுடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் அதிகமான ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் கதாநாயகன் முத்துவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல வில்லியாக இருக்கும் ரோகிணிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரோகிணி கேரக்டர்
ஒரு பக்கம் ரோகிணியின் செயலை பலரும் திட்டிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ஐயோ பாவம் என்று பலருடைய அனுதாபத்தையும் ரோகிணி கேரக்டர் பெற்றுக் கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களையும் அதே கேரக்டராகவே ஏற்றுக் கொள்வார்கள். அதுபோலத்தான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மாவையும் ரோகிணியாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.
சிறகடிக்க ஆசை பார்லர் அம்மா
சில வருடங்களுக்கு முன்பு குமரன் இயக்கத்தில் வெளியான தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் மற்றும் அவருடைய அண்ணி கேரக்டர் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானதோ அதே போல இப்போது குமரன் இயக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் ரோகிணி கேரக்டர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அதிலும் முத்து ரோகிணியை பார்லர் அம்மா என்று கூப்பிடுவதை போலவே எல்லோரும் பிரமோவில் ரோகிணியை பார்லர் அம்மா என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
ஜீ தமிழ் சீரியல் வில்லி
இது ஒரு பக்கம் இருந்தாலும் ரோகிணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மா அருண் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் தான் வில்லியாக நடித்திருந்தார். அதற்கு முன்பு ஒரு சில திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு சிறகடிக்க ஆசை சீரியல் தான் பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது. இந்த சீரியலுக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சல்மா நடித்த திரைப்படம்
சினிமா மற்றும் சீரியல் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய குடும்பத்தை பற்றி ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசி இருந்தார். பொதுவாக பல நடிகைகள் திருமணத்திற்கு முன்பு சினிமாவில் அறிமுகமாகி நடித்து பிரபலமான பிறகு திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சல்மா அதற்கு நேர் மாறாக இருந்திருக்கிறார். திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் இவர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவருடைய கணவர் சம்மதத்துடன் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
நடிகை சல்மா அருண் குடும்பம்
சல்மா மற்றும் அவருடைய கணவர் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள். சல்மா முஸ்லிம் மதத்தை சார்ந்தவர். அவருடைய கணவர் இந்து மதத்தை சார்ந்தவர். இதனால் ஆரம்பத்தில் பல பிரச்சனைகள் வந்தாலும் எங்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக கொண்டு போய்க்கொண்டிருக்கிறது என்று சல்மா பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அதுபோல சல்மாவிற்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. பலர் சல்மா சிங்கிளாக இருக்கிறாரா என்று கேட்டு வரும் நிலையில் அவர் தன்னுடைய கணவரோடு எடுக்க புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

சகோதரியின் பிறந்தநாள்
இந்த நிலையில் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சல்மா தன்னுடைய சகோதரியோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உடன்பிறப்பே. உன்னை என் சகோதரியாக பெற்றதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நீ என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர். எங்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை. என் அன்றாட வாழ்வில் அனைத்து கதைகளையும் நான் உன்னுடன் பகிர்ந்து கொள்ளாமல் ஒரு நாள் கூட இல்லை. மணிக்கணக்கில் என் மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களை பொறுமையாக கேட்டதற்கு நன்றி.
எனது எல்லா உயர்வு தாழ்வுகளிலும் நீ என்னுடன் நின்று இருக்கிறாய். நீ என்னை கவனித்துக் கொள்வதை பார்க்கும் போது நான் தான் உன்னை விட இளையவள் என்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. வாழ்க்கையில் சிறந்ததை தவிர உனக்கு வேற எதையும் நான் விரும்புவதில்லை. நீ தொடர்ந்து எனக்கு அளிக்கும் அனைத்து அன்பு, அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌசி" என்று குறிப்பிட்டு இருக்கிறார். சல்மாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications