Saroja Devi: தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும் அப்படி கிடையாது.. சரோஜாதேவி மறைவு குறித்து குஷ்பூ உருக்கம்
சென்னை: பழம்பெறும் நடிகையான சரோஜாதேவி 87 வயதில் உடல்நிலை குறைவு காரணமாக இன்று (ஜூலை 14ஆம்) தேதி பெங்களூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் காலமானார். சரோஜாதேவியின் மறைவு குறித்து பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வரும் நிலையில் குஷ்பு வெளியிட்ட பதிவு இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் வலம் வந்த சரோஜாதேவி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஆனாலும் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு பெரிதாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை சரோஜாதேவியின் தந்தை காவல் அதிகாரியே ஆக இருந்தாலும் அவர்தான் சரோஜாதேவி நடிப்பு பக்கம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

மகாகவி காளிதாசன் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான சரோஜாதேவி சிவாஜி கணேசனின் "தங்கமலை ரகசியம்" படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் கதாநாயகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பொதுவாக எம்.ஜி.ஆருக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள், அதுபோல சிவாஜிக்கு என்று ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற அனைவருடைய ரசிகர்களும் சரோஜாதேவிக்கு ரசிகர்கள் தான். சரோஜாதேவியின் மறைவு அவருடைய ரசிகர்கள், சினிமா துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சரோஜாதேவி பேசிய பழைய பேட்டிகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சரோஜாதேவி பற்றிய நினைவுகளை நடிகர்கள் நடிகைகள் தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை குஷ்பூ வெளியிட்ட பதிவில், "ஒரு சினிமா சகாப்தம் முடிவுக்கு வருகிறது. சரோஜாதேவி அம்மா எல்லா காலத்திலும் சிறந்த நடிகை. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும் அவரைப் போல பெயரையும் புகழையும் அனுபவித்ததில்லை. அவர் மிகவும் அன்பானவர். அவருடன் ஒரு சிறந்த உறவு இருந்தது. அவரை சந்திக்காமல் பெங்களுருக்கான எனது பயணம் முழுமை அடையாது. சென்னையில் இருக்கும் போதெல்லாம் அவர் அழைப்பார். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதுபோல நடிகை ராதிகா வெளியிட்ட பதிவில் "எத்தனையோ நடிகைகள் வந்தாலும் சரோஜாதேவி அம்மாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவங்கதான் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அப்போதே பெயர் வாங்கியவர். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் அவருடைய நடிப்புக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு அசைவுகளும் அவ்வளவு நுணுக்கமாக இருக்கும்.
என்னிடம் பழகும் போது எப்போதும் ராதா அண்ணா பொண்ணு என்று கூப்பிடுவார். கடைசியாக அவரை பார்க்கும் போது கூட என் அண்ணன் பொண்ணு என்ற உரிமையில் அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை நினைக்கும் போது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது" என்று ராதிகா கூறியிருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications