தல ஓணம் கொண்டாடிய ஷபானா ரசிகர்களிடம் கூறிய மகிழ்ச்சியான செய்தி...குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: செம்பருத்தி சீரியலில் மூலமாக பிரபலமான ஷபானா தற்போது மகிழ்ச்சியான செய்தியை கூறி இருக்கிறார்.
புதியதாக திருமண முடிந்திருக்கும் ஷபானா தல ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்த கையோடு ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஷபானாவின் புது முயற்சிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சன் டிவியில் அறிமுகமாக போகும் புது சீரியல்.. மெயின் கேரக்டரில் இத்தனை பேரா.. !!??

ரசிகர்களை கவர்ந்த செம்பருத்தி
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் மூலமாக பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானவர் தான் ஷபானா. ஷபானா என்று பெயரை சொல்வதை விடவும் இவரை செம்பருத்தி பார்வதி என்று சொன்னாலே அனைவருக்கும் தெரிந்து விடும். அந்த அளவிற்கு அந்த கேரக்டரோடு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து போய்விட்டார் ஷபானா நடித்த முதல் சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாகும் என்பதை அவரே ஆரம்பத்தில் நம்பியிருக்க மாட்டார். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு அதிகரித்து கொண்டு தான் இப்ப வரைக்கும் இருந்து வருகிறது.

ரசிகர்களை பாதித்த காதல்
பொதுவாக சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அதிகமாக பார்த்து வருவார்கள். ஆனால் செம்பருத்தி சீரியலில் இவருக்காகவே பல இளைஞர்களும் இந்த சீரியல் தொடர்ந்து பார்த்து வந்தனர்.அந்த அளவிற்கு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருக்கு திருமணம் முடிந்த செய்தி பல இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக தான் இருந்து வந்துள்ளதாம். ஷபானா சின்னத்திரை நடிகரான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திடீர் காதல் செய்தி பலருக்கு வியப்பையும், இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருந்தது.

தல ஓணம்
சமூக வலைத்தளத்தில் ஷபானா தன்னுடைய காதல் ரகசியத்தை போட்டு உடைத்த நேரத்தில் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும், பல ரசிகர்கள் தங்களுடைய அதிர்ச்சியை கமெண்டுகளில் கண்ணீராக கொட்டி வந்தனர். ஆனாலும் தங்களுக்கு பிடித்த ஷபானா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் பலருடைய விருப்பமாக இருந்து வருகிறது. தற்போது ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் தல ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டு கொண்டாடி இருக்கின்றனர். தாங்கள் தல ஓணம் கொண்டாடினதை வீடியோவாக எடுத்து தங்களுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

மகிழ்ச்சியான செய்தி
ஷபானா தன்னுடைய ரசிகர்களுக்கு வீடியோ மூலமாக மகிழ்ச்சியான செய்தியை கூறி இருக்கிறார். அதில் புதிதாக தொடங்கி இருக்கும் இந்த யூடியூப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருவதாகவும், அதுபோல தான் எங்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறேனோ அதைப் பற்றிய வீடியோவாகவும், தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும் ரசிகர்களிடம தெரிவித்து வருவதாக கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பல பலர் அப்போ புது சீரியலின் அப்டேட் குறித்து கேட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் சன் டிவி சீரியலில் நடிக்க இருக்கிறீர்கள் என்ற செய்தி பரவி வருகிறதே உண்மையானதா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதற்கான பதிலை அடுத்த வீடியோவில் ஷபானா கூறி விடுவார் என அவருடைய ரசிகர்கள் அவருடைய யூடியூப் பக்கத்தை அடிக்கடி செக் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications