சன் டிவியில் அறிமுகமாக போகும் புது சீரியல்.. மெயின் கேரக்டரில் இத்தனை பேரா.. !!??

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சன் டிவியின் புது சீரியலில் தினேஷ்குமார், அக்னி, ராதிகா ப்ரீத்தி, நிவிஷா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

செம்பருத்தி சீரியல் முடிவடைந்ததும் அக்னி தற்போது சன் டிவியில் புது சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அறிமுகமாகும் புது சீரியல்

அறிமுகமாகும் புது சீரியல்

சன் டிவியில் தற்போது பல புது சீரியல்கள் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த புது சீரியலில் நடிக்க இருக்கும் முக்கிய நடிகர்கள் யார் என்ற செய்திகளும் வெளியாகி இருக்கின்றன. அதில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த தினேஷ் கார்த்திக், செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த அக்னி மற்றும் சன் டிவி சீரியலில் பூவே உனக்காக சீரியலில் நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி மற்றும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்த நிவிஷா போன்றோர் இந்த சீரியலில் முதன்மையான கேரக்டரில் நடிக்க இருக்கிறார்களாம்.

தொடர்ந்து வரும் வாய்ப்புகள்

தொடர்ந்து வரும் வாய்ப்புகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலமாக பலருக்கும் பரீட்சயமான தினேஷ் கார்த்திக் அந்த சீரியலின் அவருடன் நடித்த ரட்சிதா மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் தங்களுடைய திரை துறையில் பயணித்து வந்தாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் புறம் என்னும் சீரியலில் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்தனர். இந்த சீரியல் கொரோனா காலகட்டத்தில் திடீரென்று முடிவடையப்பட்டதும் அதற்கு பிறகு தினேஷ் எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். ரட்சிதா விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி தற்போது ஜீ தமிழில் சொல்ல மறந்த கதை என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சமூக வலைத்தளத்தில் தற்போது தினேஷ் மற்றும் ரட்சிதா இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் தினேஷ் ரசிகர்கள் அவரை அதிகமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தற்போது புது சீரியலில் கமிட்டாகி இருப்பதால் அந்த சீரியல் எப்போது வரும் என்று பலரும் இந்த சீரியலுக்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாக சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுபோல அக்னி தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சையமாகி இருந்தாலும் செம்பருத்தி சீரியலில் மூலமாக கதாநாயகனாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்துள்ளார். தற்போது செம்பருத்தி சீரியல் முடிவடைந்ததும் மீண்டும் இவர் சீரியலில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

விரைவில் தெரியும் ரகசியம்

விரைவில் தெரியும் ரகசியம்

சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் இந்த புது சீரியலுக்கான பெயர் இன்னும் வெளியே தெரியவில்லை என்றாலும் இதில் இரண்டு கதாநாயகிகளும் கதாநாயகர்களும் இருப்பதால் இது இரு துருவமாக இருக்குமோ அல்லது கீதாஞ்சலி எனும் சீரியலாக இருக்குமா? என ஒவ்வொரு ரசிகர்களும் தங்களுடைய எதிர்பார்ப்பை கருத்துகளாக பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலில் நடிக்க இருக்கும் இந்த நடிகர்கள் யாரும் தங்கள் புது சீரியலில் கமிட் ஆகிய இருப்பதை பற்றி எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதனால் விரைவில் இதற்கான பதில் கிடைக்கும் அதுவரை பொறுத்திருக்கலாம் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+