ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதாநாயகி.. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதாநாயகியாக மெயின் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவி கதாநாயகியின் போட்டோ ஜீ தமிழ் சீரியலில் காட்டப்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஒரு சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரைம் டைம் சீரியல் நடிகைகள் மற்றொரு சேனலில் அதேபோல பிரைம் டைம் சீரியலில் நடிப்பது அபூர்வம். ஆனால் சில மனம் கவர்ந்த நடிகைகளை மற்றொரு சீரியலில் பார்க்கும் போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதுபோலத்தான் இப்போதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஷாலினியை ஜீ தமிழ் சீரியலில் பார்த்ததும் ரசிகர்கள் வாவ் சொல்லி வருகிறார்கள். அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியல் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் முடிவுக்கு பிறகு இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது பாகம் முதல் பாகத்தைப் போல வெற்றியடையுமா? என்பது பலருடைய கேள்விக்குறியாக இருந்தது. காரணம் அந்த நேரத்தில் பல சீரியல்கள் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டு சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் அந்த வரிசையில் சேர்ந்து விடும் என்று சிலர் கூறி இருந்தனர்.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தலைப்பில் சீரியல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திற்கும் அதிக ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். அதிலும் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலருக்கும் அதிகமான ரசிகர்களும் உருவாகி விட்டனர்.
இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அது மக்களை கவர்ந்து வருகிறது. அதுபோல ராஜி, கதிர் ஜோடி இளம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இதில் ராஜி கேரக்டரில் நடிகை ஷாலினி நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷாலினிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அழகாக டான்ஸ் ஆடும் டான்ஸரான இவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்படுகிறது. இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் சீரியலில் இவருடைய புகைப்படம் நேற்றைய எபிசோடில் காட்டப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஜீ தமிழில் சமீபத்தில் தான் கெட்டிமேளம் சீரியல் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே விறுவிறுப்பாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் அதிகமான இளம் நடிகர்கள் நடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெற்றி கேரக்டரில் நடிக்கும் சிபுவிற்கு பெண் பார்ப்பதற்காக அவருடைய அப்பா இரண்டு புகைப்படங்களை காட்டுகிறார். அதில் ஒரு புகைப்படத்தில் ஷாலினி இருக்கிறார்.
Top 10 Tamil Serials: முதல் இடத்தை தவறவிட்ட சிங்க பெண்ணே.. மேலே வந்த எதிர்பாராத சீரியல்
இதனால் இவர் இந்த சீரியலில் வரப்போகிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது குறித்து ஷாலினி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் ஷாலினிக்கு தெரிந்து அவருடைய புகைப்படம் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அல்லது அவருக்கு தெரியாமலேயே அந்த புகைப்படத்தை காட்டி இருக்கிறார்களா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

ஆனால் நேற்றைய எபிசோடில் இரண்டு இடத்தில் அவருடைய புகைப்படத்திற்கு குளோசப் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஷாலினி வெற்றிக்கு பார்க்கப்படும் பெண்ணாக வெற்றி இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. வெற்றி துளசியாக நடிக்கும் சாயா சிங்கை காதலித்துக் கொண்டிருக்கிறார்.
புது படத்தில் பிக் பாஸ் ஜனனிக்கு ஜோடியாகும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோ.. இவர் அந்த சீரியல் நடிகையின் கணவர்!
இதனால் ஷாலினி இந்த சீரியலில் அறிமுகமானாலும் அவருடைய காட்சிகள் அதிக நாட்களுக்கு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது. இவருடைய புகைப்படம் சீரியலில் காட்டப்பட்டிருந்தாலும் ஷாலினியின் கேரக்டர் என்ன என்பது குறித்து இன்று தெரிய வரும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications