Sujitha: ரயிலில் போகும்போது கட்டிப்பிடித்த ரசிகர்.. கவர்ச்சிக்கு நோ! பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் உருக்கமான பேட்டி
சென்னை: தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையின் பிரபல நடிகையான சுஜிதா, தனது 40 ஆண்டுகளுக்கும் மேலான கலைப் பயணம் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, இன்று குடும்பங்கள் கொண்டாடும் சீரியல் நடிகையாக மாறிய தனது அனுபவங்கள் குறித்தும், ரசிகர்களின் அன்பை உணர்ந்த தருணங்கள் குறித்தும் அவர் பகிர்ந்து இருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணியாக பலருடைய மனம் கவர்ந்த இவருடைய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் இந்த சுஜிதா
சுஜிதா, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இரண்டிலும் நடித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இவர் தனது திரைப்பயணத்தை குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கினார். எம்.ஜி.ஆர். தயாரித்த ஒரு படத்தில் 40 நாள் குழந்தையாக இருக்கும்போதே நடித்தார். ஆனால், அந்தப் படம் வெளியாகவில்லை. பின்னர், கே. பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படம் தான் அவர் நடித்த முதல் வெளியான திரைப்படம். பாக்யராஜ் தனது வாழ்க்கையில் ஒரு பெரிய ஆதரவாளராக இருந்தவர் என்றும் சுஜிதா குறிப்பிட்டார்.
சீரியல் பயணம்
சுஜிதா தனது எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ஏவிஎம் தயாரிப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். படப்பிடிப்புகள் பெரும்பாலும் சென்னையிலேயே இருந்ததால், படிப்புக்கும் நடிப்புக்கும் இடையே அவர் எளிதாகச் சமன் செய்ய முடிந்தது. சன் டிவியில் பெரிய வெற்றி பெற்ற கணவருக்காக என்ற சீரியலில் அவர் ஏற்ற சந்தியா கதாபாத்திரம், அவரைப் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவராக மாற்றியது.
அதன் பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார். இந்த சீரியல் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு கதை என்றும், ஆண்கள்கூட விரும்பிப் பார்க்கும் சீரியல் இது என்றும் சுஜிதா கூறினார். அதுபோல சுஜிதா நடிக்கும் சீரியல் மற்றும் திரைப்படங்களில் கவர்ச்சியான கேரக்டரில் நடிக்க மாட்டார். எப்போதுமே குடும்ப பாங்கான கேரக்டரிலேயே தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனாலே இவரை அதிகமான ரசிகர்களுக்கு பிடிக்கிறது.

சமையல் எக்ஸ்பிரஸ்
ஜீ தமிழில் அவர் தொகுத்து வழங்கும் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சி, அவரது சமையல் மற்றும் பயணம் மீதான காதலை இணைக்கும் ஒரு முழுமையான விருந்து என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின் மூலம், அவர் சமையல் கலையின் பல்வேறு அம்சங்களையும், இந்தியாவின் பல இடங்களையும் தன்னால் பார்க்க முடிந்தது என்று கூறி இருக்கிறார்.
தற்போது, அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் சில புதிய சீரியல் மற்றும் ஒரு புதிய வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அத்துடன் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
வாழ்க்கையின் பெரும் பரிசு
ஒருமுறை ரயில் பயணத்தின்போது, ஒரு ரசிகை சுஜிதாவின் கதாபாத்திரத்துடன் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் கஷ்டங்களை ஒப்பிட்டு, அவரைக் கட்டிப்பிடித்து அழுதுள்ளார். அந்தச் சம்பவம் தனது நடிப்பின் தாக்கத்தையும், ரசிகர்களின் அன்பையும் தனக்கு உணர்த்தியது என்று சுஜிதா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தான் நடித்த சீரியல் வெற்றிக்கு தனது கணவர் மற்றும் மகனின் உறுதியான ஆதரவுதான் காரணம் என்று சுஜிதா தெரிவித்தார். ஒரு மாதம் முழுவதும் வேலை செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது, தனது குடும்பத்தின் மகிழ்ச்சியான வரவேற்பு, தொடர்ந்து வேலை செய்ய தனக்குத் தன்னம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் இந்தத் துறையில் தொடர்ந்து நீடிப்பது கடினம் என்றும், தனது அம்மாவும் அத்தையும் தனக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications