விஜய் இடத்துக்கு பிரசாந்த் வரணும்.. தியாகராஜன் எனக்கு போன் பண்ணி அதிர்ச்சி கொடுத்தாரு.. வனிதா ஓபன்
சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்தகன் திரைப்படம் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. அதில் நடிகை வனிதா கலந்து கொண்டு நடிகர் தியாகராஜன் மற்றும் பிரசாந்த் பற்றி பல்வேறு தகவல்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்த அந்தாதுன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று 100 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் தமிழ் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மகன் பிரசாந்த் பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கும் நிலையில் இப்போது அவரை மீண்டும் நடிக்க வைக்க முடிவு செய்து அந்தகன் என அந்தாதுன் திரைப்படத்தை தமிழில் எடுக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் எடுக்க தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சில காரணங்களால் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் நடிகை வனிதா கலந்து கொண்டு பேசுகையில், பிரசாந்த் நான் ஸ்கூல் படிக்கும்போதே அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எனக்கு பிரசாந்த் கிரஷ்ஷாக இருந்தார். அதற்கு பிறகு தான் பிரபுதேவா எனக்கு பிடிக்க தொடங்கியது. பிரபுதேவா உடன் நடிக்க வேண்டும் என்று தான் நான் சினிமாவில் நடிப்பதற்கே சம்மதித்தேன்.
சந்திரலேகா திரைப்படத்தில் முதலில் பிரபு தேவா நடிக்க இருந்தார். பிறகு அவருக்கு பதிலாகத்தான் நடிகர் விஜய் நடித்தார். அதற்குப் பிறகு விஜய் எனக்கு கிரஷ் ஆக மாறிவிட்டார். இப்போ விஜய் புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவர் அரசியலிலும் ஈடுபட இருக்கும் நிலையில் இனி அவருடைய இடத்தில் பிரசாந்த் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுபோல தியாகராஜன் சார் போல ஒரு அப்பாவை நான் பார்த்தது கிடையாது.
இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர் பிரசாந்துக்கு பல விஷயங்களை பார்த்து பார்த்து பண்ணுவாரு. அதுபோல என் மீதும் அதிகமான அன்பு வைத்திருக்கிறார். பல வருடங்களாகவே அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் நண்பர்களாக இருந்து வருகிறோம். ஒரு முறை என்னுடைய செல்போன் தொலைந்து விட்டது. நான் தொலைத்து விட்டேனே என்று தவித்து புலம்பி கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் எனக்கு தியாகராஜன் சார் போன் பண்ணி நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டார். நான் என்ன சார் இப்போது போன் பண்ணி இருக்கீங்க என்று கேட்டேன். அவர் ஒரு சர்ப்ரைஸ் என்று சொல்லி எனக்கு புது போன் வாங்கிக் கொண்டு வந்தார். எனக்கு அது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. எப்படி நான் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று அவருக்கு தெரிந்தது...? அவர் எப்படி எனக்கு தொலைந்து போனது போலவே போன் வாங்கிக் கொண்டு வந்தார்? என்று புரியாத புதிராக இருந்தது. அந்த அளவிற்கு தியாகராஜன் சார் அவர்களுக்கு பிடித்தவர்களுக்காக பார்த்து பார்த்து செய்வாரு என்று அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications