பிறந்தநாளில் வரலட்சுமி செய்த நெகிழ வைத்த செயல்.. குழந்தைகளுக்காக எடுத்த முடிவு! குவியும் பாராட்டு
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தன்னுடைய பிறந்தநாளை சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைலன்ட் கேரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு கொண்டாடி இருக்கிறார். அதோடு அந்த குழந்தைகள் குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார்.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஆனாலும் அதைத் தொடர்ந்து தமிழில் அதிகமான வாய்ப்புகள் வரவில்லை. ஒரு சில திரைப்படங்களில் தான் தமிழில் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் அறிமுகம்
ஆனாலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிகாட்டி வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
கடந்த வருடத்தில் திருமணம்
அதுபோல கடந்த வருடத்தில் தான் வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே நிக்கோலாய்க்கு திருமணம் முடிந்து 16 வயதில் மகள் இருக்கும் நிலையில் அவருடைய முதல் மனைவியோடு விவாகரத்து நடந்த பிறகு வரலட்சுமியை திருமணம் செய்து இருக்கிறார். இதுபற்றி ஆரம்பத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

கணவர் பற்றி நெகிழ்ச்சி
ஆனாலும் தன்னுடைய கணவர் தனக்கு கொடுக்கும் சப்போர்ட் மற்றும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தனக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொடுத்து இருக்கிறது என்று வரலட்சுமி பல பேட்டிகளில் பேசி இருக்கிறார். அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய கணவரோடு வெளியிடங்களுக்கு செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இந்த நிலையில் இன்று வரலட்சுமி பிறந்தநாளுக்கு அவருக்கு அவருடைய தந்தை சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் போன்ற பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிடியூட் டாப் சைலட் கேரில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து இருக்கிறார்.
வரலட்சுமி சரத்குமாரின் பிறந்தநாள்
அப்போது இது பற்றி வரலட்சுமி பேசுகையில், புற்றுநோயாளிகள் பலரை காப்பாற்றும் இதயத்தை தொடும் பணியை செய்து வரும் மருத்துவர்களோடு சேர்ந்து இந்த பிறந்த நாளை அர்த்தம் உள்ளதாக கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் . பொதுவாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு நெருக்கமானவர்களும் நம்முடைய நண்பர்களும் இதுபோன்று புற்றுநோயால் பாதிக்கப்படும்போதுதான் இது பற்றி சிந்திக்கிறோம்.
புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு
இவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால் அதற்காக நாம் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டாம் நம்மால் முடித்து அளவிற்கு பத்து ரூபாய் கொடுப்பது கூட பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதுபோல புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணம் மேற்கொண்டு முடித்தவர்களை கண்டு நான் சந்தோஷப்படுகிறேன்.

ரசிகர்கள் பாராட்டு
அவர்களை பார்க்கும்போது பெருமையாகவும் இருக்கிறது. பல நோயாளிகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை பார்க்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரோடு சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகள் மையத்திலும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடை வழங்கி அவர்களுடைய சந்தோஷத்தில் தன்னுடைய பிறந்தநாளை வரலட்சுமி கொண்டாடி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications