இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு விசிட் அடித்த பிரபல நடிகைகள்.. அடடா காரணம் இதுதானா? சூப்பர் கியூட்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் விக்ரமனின் மனைவியான ஜெயப்பிரியாவை பார்ப்பதற்காக நடிகை நளினி நடிகை அம்பிகா முதலாக ஜெயப்பிரியாவின் தோழிகள் ஒரு சிலர் திடீரென்று விக்ரமன் வீட்டிற்கு போய் இருக்கின்றனர் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தவறான சிகிச்சையால் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் எழுந்து நடக்க முடியாமல் இருக்கும் நிலையில் அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தோழிகள் வீட்டிற்கு போய் இருந்த நிலையில் அங்கு சில நெகிழ வைத்த செயல்கள் நடைபெற்றிருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இயக்குனர் விக்ரமன் புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்த நிலையில் அவருக்கு முதல் படமே தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான இரண்டு விருதையும் பெற்றது. அதைத் தொடர்ந்து கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல என்று பல வெற்றி படங்களை இயக்கி இருந்தார்.
விக்ரமனின் படங்கள் அதிகமாக குடும்ப பாங்காகவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் இருக்கும். காதல், பாசம், அன்பு என மொத்தமாக இருக்கும் விக்ரமனின் திரைப்படத்தை இப்போது பலர் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். விக்ரமன் படத்தில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் அன்பு, பாசம், காதல் என மொத்தத்துக்கும் அதிபதி என்று சொல்கிற மாதிரிதான் வாழ்ந்திருக்கிறார்.

அதாவது விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா ஒரு குச்சி புடி நடன கலைஞர். அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது சில தவறுகளால் கடந்த ஐந்து வருடமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். இது பற்றி சமீபத்தில் youtube ஒன்றில் விக்ரமன் தன்னுடைய மனைவியின் நிலைமை குறித்து கண்கலங்க பேசியிருந்தார். அதோடு என்னுடைய மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருப்பதால் தான் நான் என்னால் படங்களை இயக்க முடியவில்லை என்றும் உருக்கமாக பேசியிருந்தார்.
அதற்கு பிறகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுரையின்படி விக்ரமனின் மனைவிக்கு மருத்துவ குழுவினர்கள் விக்ரமன் மனைவியை பரிசோதித்து விட்டு விரைவில் அவர் குணமாகிவிடுவார் என்று கூறியிருந்தனர். இப்படியான நிலையில்தான் விக்ரமனின் மனைவியான ஜெயப்பிரியாவை பார்ப்பதற்காக நடிகை நளினி, நடிகை அம்பிகாவோடு சேர்ந்து ஜெயப்பிரியாவின் மேலும் ஒரு சில தோழிகளும் ஜெயப்பிரியாவின் வீட்டிற்கு போய் இருக்கின்றனர்.
அங்கு ஜெயாப்பிரியாவோடு சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்து இருக்கின்றனர். சோகமாக இருந்த ஜெயப்பிரியாவின் முகத்தில் தன்னுடைய தோழிகளால் வந்த சந்தோசத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஜெயப்பிரியா உடல் நலம் சரியாகி மீண்டும் பழையபடி வரவேண்டும் என்று தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுவும் உடல்நிலை சரியில்லாததால் வருத்தத்தில் இருக்கும் ஜெயப்பிரியா விரைவில் சரியாக வேண்டும் என்று அவருடைய தோழி ஒருவர் தான் நேரில் சந்தித்து அவருடைய சார்பாக கோவிலுக்கு காசு முடிந்து வைத்து அதை காணிக்கை செலுத்த போவதாகவும் அதற்காகத்தான் ஜெயப்பிரியாவை பார்க்க வந்ததாகவும் கூறியிருக்கிறார். இது போன்ற நல்ல நட்புகள் கூட இருந்தாலே எந்த கவலையும் நிலைத்து நிற்காது. அதுபோல இப்படிப்பட்ட நட்புகளை ஜெயப்பிரியா பெற்று இருப்பதால் இவர் விரைவில் பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று பலர் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications