விஜய் டிவியில் பொன்னி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. எதிர்பாராத கதைக்களம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்னி சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மற்றொரு சீரியலும் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியலுக்கான இறுதிநாள் சூட்டிங் நடைபெற்று விட்டது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொலைக்காட்சியில் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாம் டிவியில் மட்டுமே சீரியல் பார்க்க முடியும். ஆனால் இப்போது கதை அப்படி கிடையாது. சோசியல் மீடியாவில் எப்போது வேண்டும் என்றாலும் சீரியலை பார்க்க முடிகிறது. அதனால் வீட்டில் சீரியல் பார்க்காதவர்கள் கூட பஸ்ஸில் போகும்போதும் சரி, வேலை பார்க்கும் இடங்களிலும் சரி நேரம் கிடைக்கும் நேரத்தில் டிவி பார்த்து விடுகிறார்கள்.

முடிவுக்கு வரும் சீரியல்
அதனாலயே புதியது புதியதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் சன் டிவியில் தான் அதிகமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும். ஆனால் இப்போது மற்ற சேனல்களிலும் அதற்கு போட்டியாக சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் டிஆர்பிஐ மையமாக வைத்து சீரியல்களில் சில ட்விஸ்ட்களும் வைக்கப்படுகிறது. டிஆர்பி குறைய தொடங்கியதும் அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். அதுபோலத்தான் இப்போது விஜய் டிவியில் ஒரு சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது.
விஜய் டிவி சீரியல்
அது மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியல் தான். இந்த சீரியல் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி தான் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை அஸ்வினி ஆனந்தா, ஜீவிதா கிருஷ்ணன், அஜய் ரத்தினம், காயத்ரி ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
தங்கமகள் சீரியல் கதை சுருக்கம்
இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 200 எபிசோடுகளை தாண்டி சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியலில் இருக்கும் கதாநாயகி பெரிய பணக்கார குடும்பத்தை சார்ந்தவர். அவர் காரில் வேகமாக வந்து கொண்டிருக்கும் போது ராமசாமி என்ற ஒருவர் மீது மோதி விடுகிறார். இதனால் அவர் இறந்து விடுகிறார்.
சீரியல் கதை
அவருடைய குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு வர வேண்டும் என்று பணக்கார மகளை அவருடைய அம்மா அந்த இறந்தவரின் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு இறந்தவரின் மகள்களிடம் மன்னிப்பு வாங்குவதற்காக பல அவமானங்களையும் கஷ்டங்களையும் கதாநாயகி தாங்கிக் கொண்டிருக்கிறார். இப்படித்தான் கதை போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் காதல் மோதல் என்று பல விஷயங்களும் வந்து வந்து போகிறது.
வருத்தமான கமெண்ட்ஸ்
இந்த நிலையில் இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த சீரியல் வழக்கமாக இருக்கும் கதையை ஒட்டி இல்லாமல் வித்தியாசமான கதையோடு ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியல் திடீரென்று இப்போது முடிவுக்கு வருவது இந்த சீரியல் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி யாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களும் சீரியல் முடிவது குறித்து வருத்தமான போஸ்ட்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications