மோடி போன ஜென்மத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? அதனால் தான் இப்போ! பகீர் கிளப்பிய திடீர் அகோரி
சென்னை: சமீபத்தில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திடீர் அகோரி கலையரசன் பிரதமர் நரேந்திர சிங் மோடி போன ஜென்மத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? என்று தான் கணித்ததாக சில தகவல்களை சொல்லி இருக்கிறார். அதோடு நரேந்திர சிங் மோடி மட்டுமல்லாமல் தான் ஒரு சிலரை பார்க்கும்போது அவர்கள் கடந்த ஜென்மத்தில் எப்படி இருந்தார்கள் என்பதை சொல்ல முடியும் என்றும் கலையரசன் கூறியிருக்கிறார்.
ஒரு சில வாரங்களாகவே சமூக வலைத்தளத்தை திறந்தாலே அதில் திடீர் அகோரி கலையரசன் வீடியோக்கள் தான் அதிகமாக இருக்கிறது. youtube சேனல்கள் தொடர்ச்சியாக அவரை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கலையரசனை சில வருடங்களுக்கு முன்பே டிக் டாக் பேமஸ் ஆக இருந்தபோது பலருக்கும் தெரிந்திருக்கும். கலையரசன் மற்றும் அவருடைய மனைவி இருவருமே டிக் டாக் பிரபலங்கள்.

இருவரும் அடிக்கடி டான்ஸ் வீடியோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலங்களாக இருந்தனர். அதிலும் கலையரசனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது டியூப் லைட் உடைத்தபடியே பறை இசைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு கலையரசன் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்து இவர்களுக்குள் இப்படி ஒரு பிரச்சனையா? என்று பலரையும் பேச வைத்திருந்தது.
பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாகவும் வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது. இப்படியான நிலையில் சில வருடங்களாக கலையரசன் பற்றி எந்த செய்திகளும் இணையத்தில் இல்லாமல் இருந்த நிலையில் இப்போது ஒரு சில நாட்களாகவே கலையரசன் திடீர் அகோரி அவதாரம் எடுத்து இணையத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.
கலையரசனின் திடீர் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து இவர் தன்னை அகோரி என்று சொல்வதை கேட்டு ஒரு சில பிரபலங்கள் கலையரசனுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு கலையரசன் மனைவி பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் இப்போது மீண்டும் கலையரசன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது கலையரசன் பேசுகையில் நான் ஒருவரை பார்த்தாலே அவருடைய முந்தைய ஜென்மம் என்னவாக இருந்தது என்பதை கணித்து விடுவேன்.
அதை பார்த்த உடனே சொல்லா விட்டாலும் தியான நிலையில் இருக்கும் போது ஒருவரை பற்றி நினைத்தால் அவர்கள் முந்தைய ஜென்மத்தில் என்ன மாதிரி இருந்தார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும். அந்த மாதிரி இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி போன ஜென்மத்தில் "ஒரு சித்தராக இருந்திருக்கிறார்" என்று தான் எங்களுடைய சிந்தையில் தெரிகிறார்.
மோடி போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் இந்த ஜென்மத்தில் அவருக்கு அதற்குரிய பலன் கிடைத்து பல பேரை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று கலையரசன் கூறியிருக்கிறார். அதோடு நாங்கள் பிரதமரின் பூர்வ ஜென்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அவருக்காக பார்த்ததில்லை. நாங்கள் காசியில் இருக்கும்போது சித்தர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது மோடியை பற்றி அதிகமாக பேசிக் கொண்டிருப்போம்.
அவருடைய பூர்வ ஜென்மம் பற்றி கூட அங்கே எல்லோரும் சொல்லுவார்கள் அதுபோல நாம் வேறு ஒருவரை பற்றியோ அல்லது வேறு ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கும்போது சில நினைவுகள் தானாக வரும் அந்த மாதிரி தான் எனக்கு மோடி பற்றி தெரிய வந்தது என்று அந்த பேட்டியில் கலையரசன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications