Ajith: பத்து பேரு என்ன கொல்ல பாத்தாங்க! அஜித் சொன்ன ஒரே வார்த்தை! நான் தப்பிச்சிட்டேன்.. பாவா லட்சுமணன் உருக்கம்
சென்னை: நம்ம தமிழ் சினிமாவில் இருக்குற முன்னணி நடிகர்கள்ல அஜித் ரொம்பவே வித்தியாசமானவர். அவர் ஆண்டுதோறும் புதுக் கதை, புது அணுகுமுறையோட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிச்சுட்டு வர்றார். 'விடாமுயற்சி' அப்புறம் **'குட் பேட் அக்லி'ன்னு ரெண்டு படம் மூலமா ரசிகர்கள் மத்தியில பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கார். குட் பேட் அக்லி படம் பெரிய வெற்றியடைஞ்சதால, அடுத்தடுத்து அஜித் எப்படி நடிப்பாருன்னு எல்லாரும் ஆவலா காத்திருக்காங்க.

மறுபடியும் ஆதிக் ரவிச்சந்திரனுடன்
இந்த எதிர்பார்ப்புக்கு இடையில, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மறுபடியும் இணையப் போறதா ஒரு தகவல் உறுதியாகி இருக்கு. இது கிட்டத்தட்ட உறுதியான செய்தின்னு சொல்றாங்க. இதுபத்தின அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.
அஜித்தின் பெருந்தன்மை
அஜித்துடன் வேலை பார்த்த பிரபலங்கள் எல்லாரும் அவருடைய நடிப்புத் திறமை, தொழில் ஒழுக்கம், ரசிகர்கள் மீது காட்டும் அன்பு, எளிமைன்னு பல விஷயங்களைப் பத்திப் பேட்டி கொடுக்குறது வழக்கம். அப்படி ஒரு அனுபவத்தைத்தான் சமீபத்துல நடிகர் பாவா லட்சுமணன் பகிர்ந்திருக்கார். அவர் 'ஜனா' படத்தின் படப்பிடிப்புல நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசியிருக்கார்.
மொட்டை போட்டு வந்த ரசிகர்கள்
படப்பிடிப்பு நடக்கும்போது, நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மொட்டையடிச்சிட்டு அஜித்தைப் பார்க்க வந்திருக்காங்க. இதை பார்த்த பாவா லட்சுமணன் ஓடிப் போய் அஜித்திடம் சொல்லியிருக்கார். உடனே அஜித் அவர்களைப் பார்த்து, "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டிருக்கிறார். அதுக்கு ரசிகர்கள், "நீங்க மொட்டையடிச்சிருந்தீர்கள், அதனால நாங்களும் செய்தோம்" என பதில் சொல்லியிருக்காங்க. இதைக் கேட்ட அஜித் சளைக்காம, அவர்களுடன் அன்போடு கை மேலே வச்சுப் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம். அஜித்தோட இந்த எளிமையைப் பார்த்து பாவா லட்சுமணனே ஆச்சரியப்பட்டிருக்கார்.
உயிரை காப்பாற்றிய அஜித்
இதற்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தைத்தான் பாவா லட்சுமணன் ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமாப் பகிர்ந்திருக்கார். "படப்பிடிப்புக்கு பிறகு சிலர் என்கிட்ட வந்து சண்டையிட முயன்றாங்க. உடனே நான் ஓடிப் போய் அஜித்திடம் சொன்னேன். "உடனே அஜித், அந்தக் குழுவைப் பார்த்து கடுமையாக கேட்டிருக்கிறார் 'அவங்க என்னப் பார்க்க வந்தாங்க, பார்த்தாங்க, போட்டோ எடுத்தாங்க. அவர் அவருடைய வேலையைச் செஞ்சுட்டு இருக்காரு. ஏன் அடிக்க வரீங்க?' என்று கேட்டதும், அந்தக் குழு ஒரு வார்த்தை கூடப் பேசாம சென்றுவிட்டதாம்."
இந்த சம்பவங்கள பற்றி பேசிய பாவா லட்சுமணன், "இந்தச் சம்பவங்கள் அஜித்தின் மனிதநேயம், ரசிகர்களுக்கு காட்டும் மரியாதை, உடன் பணிபுரிபவர்களைப் பாதுகாக்கும் மனநிலை ஆகியவற்றைக் காட்டுது" என்று அஜித்தைப் பாராட்டியிருக்கிறார்.
சமீபத்தில் கூட பேட்டியில் பேசும் போது சிலர் ரசிகர்கள் என்ற பெயரில் தவறாக நடந்து கொள்வதாகவும் வேதனையோடு பேசி இருந்தார். தனக்கு கை கொடுக்க வேண்டும் என்று சில ரசிகர்கள் ஆசைப்பட்டதால் தான் கை கொடுத்ததாகவும் பிறகு தன்னுடைய கையை பார்க்கும் போது பிளேடால் வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது என்றும் சொல்லியிருந்தார். இது போல சிலர் ரசிகர்கள் என்கிற பெயரில் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று அஜித் வருத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications