AK64 சர்ப்ரைஸ் வந்துருச்சு.. அஜித்திடம் ரஜினி ஏன் அப்படி சொன்னார் தெரியுமா? அதுதான் சூப்பர் ஸ்டார்
சென்னை: குட் பேட் அக்லி படம் வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல வசூலை தந்தது..20 நாட்களில், உலகளவில் ரூ. 282 கோடி வசூல் செய்திருந்தது.. கலவையான விமர்சனத்தையும் பெற்று தந்தது, அஜித் தரப்புக்கும் திருப்தியை தந்திருந்தது.. இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றில் விரிவாகவே பேசியிருக்கிறார்.
''குட் பேட் அக்லி'' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அஜித்தின் 64வது படத்தின் மீது மொத்த பேரின் கவனமும் குவிந்துள்ளது.. ஏற்கனவே இந்த படம் குறித்து பேசிய அஜித், 64வது படத்தின் ஷூட்டிங் நவம்பரில் தொடங்கும் என்றும், அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.

எகிறும் எதிர்பார்ப்பு
இந்நிலையில், இப்படத்தை ''குட் பேட் அக்லி'' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், இதனை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல, ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயின் என்றும் சொல்கிறார்கள்.. எனவே, அஜித்தின் 64வது படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிற துவங்கிவிட்டது.
கூடுதல் தகவல்கள்
இந்நிலையில், Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர் வரப்போகும் அஜித் படம் குறித்து கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்..
அவர் சொல்லும்போது, "அஜித்திடம் வேல்ஸ் நீண்ட காலமாகவே தேதி கேட்டுக் கொண்டிருந்தார்.. அந்தவகையில் இப்போது படம் கன்பார்ம் ஆகி, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபரில் ஷூட்டிங்கில் நடக்கலாம் என்பதால், விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும்..
ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேசியிருக்கிறார்கள்.. மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. எப்படியும் அடுத்தவருடம்தான் படம் ரிலீஸ் ஆகும்..
2 ஆக பிரித்து வாழ்க்கை
வழக்கமாக 4மாதம் ஷூட்டிங், மிச்சம் 8 மாதம் ரேஸ் என்று தன்னுடைய ஷெட்யூலை 2 ஆக வகுத்து செயல்பட்டு வருகிறார் அஜித்..
சினிமாவுக்கும், ரேஸுக்கும் சம்பந்தமே இல்லாவிட்டாலும், இரண்டிலுமே அஜித் சக்ஸஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். அதிலும் ரேஸுக்காக ரிஸ்க் எடுத்து, உடலை வருத்திக்கொண்டு, பல கோடி ரூபாய் முதலீடு செய்து, பயிற்சிகளை கடுமையாக மேற்கொண்டு அஜித் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவருக்கும் மனதிருப்தியை தருகிறது, நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறது.
ஆரம்ப காலங்களில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பதாக சொல்வார் அஜித்.. காரணம், ரிஸ்க்கியான விஷயங்களில் ஆர்வம் உடையவர்.. இதனாலேயே பல இயக்குனர்கள் அப்போது புலம்பினார்கள்.. ஏற்கனவே அஜித்துக்கு முதுகுதண்டு உட்பட பல்வேறு சிகிச்சைகள் நடந்துள்ளன.. இப்போது சற்று கவனமாக செயல்படுகிறார். விடாமுயற்சியின் மேக்கிங் வீடியோவை பார்த்து பிரமிப்பாகிவிட்டது.
எம்ஜிஆர் - அஜித் குமார்
எம்ஜிஆருக்கு அடுத்து ரசிகர்களை சரியாக வழிநடத்தக்கூடிய நடிகர் என்றால் அஜித்குமார் என்பதை துணிந்து சொல்லலாம். ஒரு டாப் நடிகர் விட்ட இடத்தை இன்னொரு நடிகர் பிடித்துக் கொள்ள இப்போதே ஆர்வம் காட்டுகிறார்கள்..
ஒருவர் துப்பாக்கியை வைத்து கொண்டு, அந்த இடம் எனக்குதான் என்று சொல்லி கொண்டிருக்கிறார். 10 பேர் கூடசேர்ந்துவிட்டாலே,அடுத்த முதல்வர் தான் தான் என்று சில நடிகர்கள் சொல்கிறார்கள். இப்படி எதுவுமே இல்லாமல் கேஷூவலாக இருக்கிறார் அஜித்.
தனிமை விரும்பி
வெளிப்படையாக பேசக்கூடியவர்.. தனிமையை விரும்பக்கூடியவர்.. அரசியல் தனக்கு செட் ஆகாது என்று சொன்னவர். பிடித்த வாழ்க்கையை வாழ்பவர்..
முன்பெல்லாம் அஜீத்துக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.. பத்திரிகையாளர்களுக்கு பண உதவி செய்துள்ளார், சிகிச்சைக்கு உதவியிருக்கிறார்.. ஆனால் நாளடைவில் பத்திரிகை தர்மம் என்பது மாறிவிட்டதால், அஜித்தும் மெல்ல விலகி தூரமாக சென்றுவிட்டார்..
ரஜினிகாந்த் அட்வைஸ்
அதற்கேற்றார்போல், அளவுக்கு அதிகமாக வெளிப்படையாக பேசவேண்டாம், அது வேறுமாதிரியான பேக்ஃபயரை தந்துவிடும் என்று ரஜினிகாந்த்தும் அப்போது அஜித்துக்கு அட்வைஸ் தந்திருக்கிறார்.. காரணம், எந்த பின்புலமும் இல்லாமல், தன்னை போலவே அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர் என்பதால், அஜித் மீது ரஜினிக்கு ஆரம்பத்திலிருந்தே பிரியம் அதிகம்.
அதனால்தான் தன்னுடைய தீ படம் செய்ய வேண்டாம், பில்லா படம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அந்தவகையில், அஜித்தை கவனிக்கிறார், அவரது தனிப்பட்ட வளர்ச்சியையும் ரஜினி ரசிக்கிறார். பெரும்பாலும் வேறு யாருக்கும் ரஜினி இப்படி செய்ய மாட்டார். அஜித் என்றால் கூடுதல் அக்கறை, அன்பு காட்டுவார்" என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications