வருண் செய்வதை மட்டும் ரசிப்பதற்கு காரணம் இதுதான்.. என்ன இப்படி சொல்லிவிட்டார் அக்ஷரா!!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது வருண் செய்வதை மட்டும் தான் ரசிப்பதற்கு காரணம் இதுதான் என்று உண்மையை அக்ஷரா வெளியிட்டுள்ளார்.
தன்னிடம் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு அக்ஷராவின் விளக்கம் ஏற்றுக்கொள்வதாக இல்லையே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த சீசனில் அது இல்லையே
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் காட்சி உருவாகிவிடும். அது வழக்கமாக நடந்து கொண்டு வருகிறது. கடந்த நான்கு சீசன்களிலும் இது தொடர்ந்து கொண்டு வந்தாலும் இந்த ஐந்தாவது சீசனில் அப்படி ஒன்றும் எதுவும் தோன்றவில்லையே என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவர்களின் செயல்பாடுகள் பலருக்கும் சந்தேகத்தை கிளப்பி கொண்டிருந்தது. பல நேரங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வருவதும், நெருக்கமாக இருப்பதும் ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்களை எழுப்பியிருந்தது.

குடும்பத்தினரின் கருத்து
ஏற்கனவே பாவனி மற்றும் அபிநய் பிரச்சனை பூதாகரமாக வெடித்து கொண்டிருந்த நேரத்தில் அது சற்று தணிந்து இருந்த நேரத்தில் அடுத்ததாக பாவனி மற்றும் அமீர் பிரச்சனை புதியதாக தொடங்கியதால் யாரும் அக்ஷரா, வருணை சரியாக கவனிக்கவில்லை என்று ஒரு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வந்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் அக்ஷரா மற்றும் வருண் இடையே இருப்பது உண்மையான நட்பு என்று கூறிவந்தனர். இவர்களின் நடவடிக்கைகளை பார்த்த அக்ஷராவின் அண்ணன் மற்றும் அம்மா கூட வருண் தான் உண்மையான நண்பன் அவருடன் நீ தைரியமாக பழகலாம் என்று கூறியிருந்தனர்.

அண்ணனை நினைவு படுத்திய வருண்
இதைப் பார்த்ததும் வருண் பணக்கார வீட்டு பையன் அதனால் தன்னுடைய தங்கையை அக்ஷராவின் அண்ணன் பழக சொல்கிறார் என்று பலர் வித விதமான கமெண்டுகளை சமூகவலைத்தளத்தில் பரவவிட்டு வந்தனர். இந்த நிலையில் தான் அதிகமாக நெருக்கமாகவும் வருண் செய்யும் செயல்களை நான் ரசித்ததற்கு காரணமும் அவர் பல நேரங்களில் தன்னுடைய அண்ணனை நினைவு படுத்திக் கொண்டிருந்தார் என்று உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய அண்ணன் தான் தனக்கு உலகம் என்று கூறியிருக்கும் அக்ஷரா இந்த ஒரு வார்த்தையைக் கூறி ரசிகர்களின் வாயை அடைத்து விட்டார்.

காரணம் இதுதான்
ஆரம்பத்திலிருந்து ராஜுவை அண்ணன் என்று வெளிப்படையாக கூறி வந்த அக்ஷரா வருணை மட்டும் ஏன் அப்படி சொல்லவில்லை என்று ஒரு தரப்பினர் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு தரப்பினர் யாரும் கத்தி பேசினால் தனக்கு பிடிக்காது என்று கூறிய அதே அக்ஷரா தான் பலமுறை வருண் கத்தி பேசும்போது விழுந்து விழுந்து சிரித்து ரசித்து இருக்கிறார். இதற்கு காரணம் என்னவென்றும் எடக்கு மடக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு ஒற்றை வார்த்தையில் தன்னுடைய அண்ணன் இந்த மாதிரி தான் கோபப்படுவாராம், இதேபோல கத்தி பேசுவாராம். அதனால் அப்படியே இருக்கிறது என்று தான் ரசித்து இருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications