ஜீவனாம்சம் கேட்டாரா சரிகா.. வாணி கணபதியை அவசரமாக கமல் விவாகரத்து பண்ணாரா? இந்த பிரபலம் சொல்றது நிஜமா
சென்னை: கமல்ஹாசனை விட்டு பிரிந்தபோது, சரிகா தந்த பேட்டி குறித்தும், அதற்கு கமல் தந்த பதில் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.. கமல்ஹாசனின் திருமண வாழ்வை பற்றி அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.
AG Modern Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், கமல்ஹாசனுக்கு நடந்த திருமணங்கள், விவாகரத்துகள் குறித்து விரிவாக கூறியிருக்கிறார்.

"நடிகை வாணி கணபதியை கமல்ஹாசன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. தன்னுடன் "மேல்நாட்டு மருமகள்" என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் வாணி கணபதி.. அவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார்.. இவரை காதலித்து திருமணம் செய்தார்.
வாணி கணபதி: கமல்ஹாசனுடன் வாணி கணபதி வாழ்ந்து கொண்டிருந்த நேரத்திலேயே சரிகாவுடன், நட்பு கொண்டார் கமல். இந்த நட்பு காதலாக மலர்ந்தது.. இதையடுத்து, இருவரும் டேட்டிங் செய்தார்கள்.. டேட்டிங் காரணமாக சரிகா கர்ப்பமுற்றார்.. இதை அறிந்த கமலஹாசன், அந்த கர்ப்பத்தை கலைத்துவிடுமாறும், வாணி கணபதியுடன் இல்லற வாழ்வில் இருப்பதால், வாணி கணபதியை விவாகரத்து செய்ததுமே, திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் .
ஆனால், சரிகா கர்ப்பத்தை கலைக்க மறுத்துவிடடார். எனவே, அவசர அவசரமாக வாணி கணபதியை விவாகரத்து செய்தார் கமல்ஹாசன். வாணி கணபதியை கமல் விவாகரத்து செய்யும்போது, கமல்ஹாசனின் குழந்தையை சரிகா, தன்னுடைய வயிற்றில் 4 மாதம் சுமந்திருந்தார். சரிகா கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால்தான், வாணி கணபதியை கமல் விவாகரத்து செய்ய நேரிட்டது.
கமல்ஹாசன்: இதற்கிடையில், என்னுடைய கார் மற்றும் வெறும் 60 ரூபாயுடன் கமலைவிட்டு பிரிந்தேன் என்று சரிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.. ஆரம்பத்தில் தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து, "நீங்கள் ஏன் சரிகாவுக்கு ஜீவனாசம்சம் தரவில்லை" என்று கமலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சரிகா ஜீவனாம்சத்தை விரும்பமாட்டார் என்று என்கு நன்றாக தெரியும்.. யாரிடமும் சரிகா உதவி கேட்பதில்லை என்று எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும்.. அவர் உதவி கேட்காத சூழ்நிலையில், நான் எப்படி ஜீவனாம்சம் தர முடியும்?" என்று பதிலுக்கு கேள்வி கேட்டார் கமல்ஹாசன்.
கவுதமியுடன் டேட்டிங்: சரிகாவுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோதே, கவுதமியுடன் கமல் டேட்டிங் செய்த விவகாரம் சரிகாவுக்கு தெரியவந்தது.. இப்படி எத்தனை எத்தனை மனைவியைமாற்றிக் கொண்டு போவீர்கள்? எத்தனை முறை விவாகரத்து செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, கமல் அதனை மறுத்தார்.
கவுதமி மார்பக புற்றுநோயால் அவதிப்படுவதாகவும், தன்னுடைய தயவில் நோயை அழித்து கொள்ள விரும்புகிறார் என்றும் கமல் அறிவித்தார்.. ஆனால் இதை சரிகா ஏற்கவில்லை.. கவுதமியுடன் வாழ்வதாக இருந்தால் தன்னை விவாகரத்து செய்துவிடுங்கள் என்றார்.. அந்த அடிப்படையில் சரிகாவையும் கமல் விவாகரத்து செய்தார்..
கவுதமி அறிவிப்பு: அதற்கு பிறகு, கமலும், கவுதமியும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். பிறகு தன்னுடைய மகளின் நலனுக்காக, கமல்ஹாசனை விட்டு பிரிய போவதாக கவுதமி அறிவித்தது அனைவருக்குமே தெரியும்" என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
ஆனால், இந்த பழைய சம்பவங்களை அதுவும் ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களை எல்லாம் இப்போது எதற்காக இவர் பேசியிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications