உடைந்த கால்..இனியா சீரியலில் அதே சீன்..ஆபரேசனுக்கு பின் கட்டுடன் சூட்டிங்கிற்கு போன ஆல்யா மானசா
சென்னை: நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் போலவே டிவி சீரியலிலும் சீன் வைக்கப்பட்டால் நாயகிகள் அந்த காட்சிகளில் இயல்பாகவே நடித்து அசத்தி விடுவார்கள். சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா டிவி சீரியல் நாயகி ஆல்யா மானசாவிற்கு விபத்தில் நிஜமாகவே கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அதே போல ஒரு விபத்து சீரியலில் வைக்கப்பட்டு உடைந்த காலுடன் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சின்னத்திரை நாயகி ஆல்யா மானசாவிற்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகும் வீடியோவை பார்த்து லைக் போடவும் கமெண்ட் போடவும் தினசரியும் பல ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ராஜா ராணியில் தொடங்கிய பயணம் இனியா வரை நீடிக்கிறது. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் இளம் நாயகியாக இனியா சீரியலில் உற்சாகமாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகிறார் ஆல்யா மானசா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடிகர் ரிஷிக்கு ஜோடியாக, நடித்து வருகிறார். ஆணாதிக்கம் கொண்ட காவல்துறை அதிகாரியாக ரிஷியும், ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சுட்டிப்பெண்ணாக இனியாவும் நடிக்கின்றனர். இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. அக்கா, தங்கை இருவரும் அண்ணன், தம்பியை திருமணம் செய்து கொள்ளப்போகின்றனர். இதற்கான நிச்சயதார்த்தம் நடந்து விட்டது.
இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று ரிஷியின் அத்தைகள் வில்லத்தனம் செய்கின்றனர். டிஆர்பியிலும் இந்த சீரியல் முன்னணிக்கு வர போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. யார் கண் பட்டதோ இந்த நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு முதல் வாரத்தில் இனியாவிற்கு விபத்து ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது.
காலில் பெரிய கட்டோடு மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்டு மிகவும் உருக்கமாக ஆல்யா மானசா பேசியது ரசிகர்களை நெகிழ வைத்து விட்டது. நான் எதிர்பாக்காத ஒன்று என்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளது. என்னுடைய கால்கள் பிராக்சர் ஆகி உள்ளன. நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று ஆல்யா கூறவே, விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஆல்யாவின் எலும்பு முறிவுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. இதனையடுத்து கால் கட்டுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விடியோ வெளியாகியுள்ளது. சின்னத் திரை நடிகை ஆல்யா மானசாவுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், கால் கட்டுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விடியோ வெளியானது.

வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் சிகிச்சைக்கு மத்தியில் இனியா தொடர் படப்பிடிப்பில் ஆல்யா கலந்துகொண்டார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் கால் கட்டுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு படப்பில் பங்கேற்று வருகிறார் ஆல்யா. காயம் முழுமையாக குணமடையாத நிலையில், கட்டுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஆல்யாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ரியலாக நடந்த சம்பவத்தை டிவி சீரியலில் சீனாக வைத்து விட்டனர் தயாரிப்பாளர்கள். காரில் சென்று கொண்டிருந்த போது இனியாவிற்கு விபத்து ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இனியாவிற்கு கால் எலும்பு முறிந்து விட்டதாக கூறுகிறார் டாக்டர். நிஜமாக எலும்பு முறிவு ஏற்பட்ட ஆல்யா மானசா, சீரியலுக்காக இனி சக்கர நாற்காலியில் அமர்ந்து வரப்போகிறார். சோனாலியை கடத்தி வைத்தது ரிஷிதான் என்று தெரிந்தால் திருமணத்திற்கு இனியா சம்மதம் சொல்வாரா? அத்தைகளின் வில்லத்தனம் இனி எப்படி இருக்கும் என்பன போன்ற பல திருப்பங்களுடன் நகரப்போகிறது இனியா டிவி சீரியல்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications