பிக் பாஸுக்குள் நடப்பது இதுதான்! பணப்பெட்டியை எடுக்க உண்மையான காரணம்.. வெளிப்படையாக பேசிய அமுதவாணன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தான் பணப்பெட்டி எடுப்பதற்கு என்ன காரணம் என்பதை பற்றி அமுதவாணன் லைவில் ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு அமுதவாணன் முதல் முறையாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டடா என ரசிகர்கள் கேட்டு வரும் கேள்விக்கு அமுதவாணன் பதில் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தான் எதற்காக பணப்பெட்டியை எடுத்தேன் என்று அமுதவாணன் தன்னுடைய கருத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

காமெடி நடிகர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் பொருளாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் அதிக அளவிற்கு சண்டை சச்சரவுகளோடு போய்க் கொண்டிருந்தாலும் பிறகு விறுவிறுப்பு இல்லை என்று ரசிகர்கள் பலர் கருத்து கூறி வந்திருந்த நிலையில் கடைசி முடிவு யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் விஜய் டிவியில் கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அமுதவாணன் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆரம்பத்தில் இவருடைய கலகலப்பான காமெடி மற்றும் நகைச்சுவை ரசிகர்களை ரசிக்க வைத்தது. ஜி பி முத்துவோடு இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் பலர் பாராட்டி வந்தனர்.

பணப்பெட்டி
ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜிபி முத்து வெளியே சென்ற பிறகு இவர் உள்ளே இருக்கும் போட்டியாளர்களோடு அதிகமாக தன்னுடைய காமெடியை மறந்து சண்டை சச்சரவுகளோடு ஈடுபட்டு வந்தார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து பீல் பண்ணி வந்தனர். இந்த நிலையில் விளையாட்டு என்று வந்து விட்டால் அமுதவாணன் தன்னுடைய ஈடுபாட்டையும் விளையாட்டில் காட்டி அவர் ஒவ்வொரு டாஸ்க் களிலும் ஜெயித்து வந்தார். கடைசியாக இவர் இறுதி வரைக்கும் நான் மேடையில் நிற்பேன் என்று கூறிக் கொண்டு இருந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் திடீரென பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.

போட்டியாளர்கள் சொன்ன உண்மை
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக தான் எதற்காக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தேன் என்ற உண்மையை கூறியிருக்கிறார். அதில் நானும் பணப்பெட்டியை எடுக்கும் ஒரு நாளுக்கு முன்புவரைக்கும் பணப்பெட்டி எடுக்க வேண்டாம் கடைசி வரைக்கும் நாம் மேடையில் நிற்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே வந்த போட்டியாளர்கள் அனைவருமே சொன்னார்கள் கடைசியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டும்தான் மேடையில் நிற்க முடியும். மீதமுள்ளவர்கள் கண்ணை கட்டி கூட்டிக்கொண்டு வெளியே எலிமினேஷன் செய்து விடுவார்கள் என்று ஏற்கனவே நான் எவ்வளவோ உதவிகள் பலருக்கு செய்து கொண்டிருக்கிறேன்.

உண்மை இதுதானாம்
இந்த நிலையில் இந்த பணம் எனக்கு ரொம்பவுமே முக்கியமானது. ஒன்னுமே இல்லாமல் வெளியே வருவதற்கு இந்த பணத்தோடு வந்தால் எனக்கும் உதவியாக இருக்கும். என்னை சார்ந்தவர்களுக்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் நான் அந்த முடிவை எடுத்தேன் என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டடா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அது நிச்சயமாக ஸ்கிரிப்டட் கிடையாது. அங்கே அந்த நேரத்தில் என்ன நடக்கிறதோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நானும் கூட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருக்கும்போது கூட இது ஸ்கிரிப்டட் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்துருக்கிறேன் .ஆனால் அது அப்படி இல்லை என்பது உள்ளே சென்ற பிறகுதான் எனக்கே தெரிந்தது என்று கூறியிருக்கிறார். நான் பலமுறை அழுது இருக்கிறேன் அதெல்லாம் நடிப்பா என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் அது எந்த இடத்திலும் நான் நடிக்கவில்லை நான் உண்மையிலே அந்த நேரத்தில் எப்படி பிரச்சனையும் இருக்கிறதோ அதுப்படித்தான் அப்போது நானும் நடந்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications