போர் முடிந்துவிடும், தலைவர்கள் கைகுலுக்குவார்கள்! ஆனால்.. ஆண்ட்ரியா பகிர்ந்த கவிதையின் பின்னணி இதுவா?
சென்னை: இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் நடிகை ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த பதிவில் போர் பற்றி ஆண்ட்ரியா ஒரு கவிதையை பகிர்ந்து இருக்கிறார். அதை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரிய துயர சம்பவம் நடைபெற்றது. அதாவது காஷ்மீரில் பகுதியில் சுற்றுலா சென்று இருந்த பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். சந்தோஷமாக விடுமுறையை கழிப்பதற்காக சென்றிருந்தவர்கள் ரத்தம் சிந்தி குடும்பத்தினர் கண் முன்பே துடிதுடிக்க உயிரிழந்தனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவுவில் ஆபரேஷன் சித்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் ஒன்பது பயங்கர முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.

போர் தாக்குதல்
இதன் தொடர்ச்சியாக இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கு அருகே உள்ள எல்லை கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்திற்க்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் பல்வேறு நகரங்களையும் ராணுவ நிலைகளையும் குறி வைத்து பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.
ராணுவ வீரர்களின் தியாகம்
அதுபோல இந்த தாக்குதலில் சில இராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்து இருக்கிறார்கள். அந்த செய்தி அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. ஆனாலும் பல வீரர்கள் தங்களுடைய உயிரை துச்சமென மதித்து நம் அனைவரையும் காப்பாற்றுவதற்காக எல்லையில் போரிட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களின் தியாகங்களை பலரும் பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆண்ட்ரியா பகிர்ந்த கவிதை
அந்த வரிசையில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது. அந்தப் பதிவில், "போர் முடிவுக்கு வரும், தலைவர்கள் கை குலுக்கிக்கு கொள்வார்கள். அந்த மூதாட்டி தனது இறந்து போன மகனுக்காக காத்திருப்பாள். அந்த பெண் தனது அன்பான கணவருக்காக காத்திருப்பாள். அந்த குழந்தைகள் தங்கள் ஹீரோ தந்தைக்காக காத்திருப்பார்கள். நமது தாயகத்தை யார் விற்றார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதற்கான விலையை யார் கொடுத்தார்கள் என்பதை நான் கண்டேன்" என்ற பாலஸ்தீன கவிஞர் மஹமூத் தர்விஷ் எழுதிய கவிதையை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து இருக்கிறார்.
ஆண்ட்ரியா பதிவு
ஏற்கனவே பஹல்காம் தாக்குதலின் போதும் ஆண்ட்ரியா வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமாக வைரலானது. அதில், நமது நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இச்சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் சமூக மீதான வெறுப்பாக திசை திருப்பாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தை பேசுவதில்லை ஆனால் இதை சொல்ல வேண்டும் என்று இப்போது நினைத்தேன் என்று பதிவிட்டு இருந்தார். அதோடு தான் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்த போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications