அடப்பாவமே! ஆன்லைனில் ஆர்டர் செய்த அனிதாக்கு கிடைத்த அதிர்ச்சியை பாருங்க.. இப்படியுமா ஏமாத்துறாங்க?
சென்னை: செய்தி வாசிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் அனிதா சம்பத் தான் அமேசானில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்று ஆர்டர் போட்டு இருந்த நிலையில் அதற்கு பதிலாக அழுக்கடைந்து, மோசமான நிலையில் இருக்கும் புடவை ஒன்று அனுப்பப்பட்டு இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
தற்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களை பார்க்கும் போது எப்படித்தான் இப்படி புதுசு புதுசா ஏமாற்றுகிறார்களோ என்ற சிந்தனைதான் எல்லோருக்கும் வருகிறது. நாமோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ ஏதாவது ஒரு ரூபத்தில் ஆன்லைனில் ஏமாந்து கொண்டிருக்கிறோம். பலர் பண மோசடி செய்கிறார்கள். அதிலும் தனுசு தினுசாக ஒவ்வொரு நாளும் பல ரூபத்தில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய அவசர உலகத்தில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விடவும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
சின்ன குண்டூசி முதல் வீட்டிற்கு தேவையான எல்லா பொருள்களும் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே விதவிதமாக ஃபோனில் காட்டப்படுவதால் எல்லோரும் ஆன்லைனை நாடுகிறார்கள். அதனாலயே பிளிப்கார்ட், அமேசான், மீசோ என்று பல நிறுவனங்களும் புதியது புதியதாக முளைத்துக் கொண்டிருக்கிறது.
இதில் பிராண்டடான பொருள்கள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பல லட்சங்களை இழந்து போனவர்களும் இருக்கிறார்கள். அதுபோலத்தான் நடிகையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பிரபலமடைந்த அனிதா சம்பத்திற்கும் நடந்திருக்கிறது.
அனிதா சம்பத் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த நிலையில் அதைத்தொடர்ந்து மாடலிங்கில் தன்னுடைய கவனத்தை தொடங்கி இப்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருந்தார். விஜய் டிவியில் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தோடு வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் தான் ஸ்டோரேஜ் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் அமேசானில் ஆர்டர் போட்டு இருந்தேன். கடந்த ஜூன் 13ஆம் தேதி அந்த பொருள் எனக்கு டெலிவரி ஆகிவிட்டது. அந்த பொருளின் விலை 899 ரூபாய்.
அந்த நேரத்தில் எனக்கு பல டெலிவரி வந்து இருந்தது. நானும் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் இந்த பாக்ஸை பிரிக்கவில்லை. இன்று இந்த பாக்ஸை பிரித்துப் பார்க்கிறேன் உள்ளே அழுக்கு பிடித்து மிகுந்த துர்நாற்றத்தோடு ரேஷன் கடை புடவையை விட மோசமான நிலையில் ஒரு புடவை இருக்கிறது. இதற்கு எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. ஏனென்றால் ரிட்டன் செய்ய வேண்டிய நாள் முடிந்துவிட்டது.
நான் இப்போதுதான் இந்த பாக்ஸை ஓபன் செய்து பார்த்தேன். இதற்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து எனக்கு பதில் சொல்ல வேண்டும். நான் இதற்கு என்ன செய்யலாம் என்று ரசிகர்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்று வருத்தமாக அந்த பதிவில் அனிதா சம்பத் பேசியிருக்கும் நிலையில் இது போல எங்களுக்கும் நடந்திருக்கிறது என்று பல ரசிகர்கள் தங்களுடைய அனுபவங்களை அந்த பதிவில் பகிர்ந்து வருகிறார்கள்.
பொதுவாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொருள்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டதுமே அது சரியானதாக இருக்கிறதா என்று நாம் செக் பண்ணி பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் வீட்டில் இல்லை என்றாலும் வேறு யாரையாவது வைத்து செக் பண்ணி பார்த்து விடுவது நமக்கு நல்லது.
அதுபோல சில நேரங்களில் சில பொருட்களுக்கு ரிட்டன் கிடையாது என்று இருக்கும். அதை ஆர்டர் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. எதிர்பாராத விதத்தில் பொருள்களில் ஏதாவது சின்னதாக டேமேஜ் இருந்தாலும் ரிட்டன் இல்லை என்ற பொருளை வாங்குவதால் நாம் தான் பணத்தை இழந்து போக போகிறோம். அதனால் இந்த மாதிரி ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications