சரிகமபவில் நடுவர் சொன்ன வார்த்தை.. தரையில் விழுந்து கதறிய போட்டியாளர்.. நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் பாடிய பாடலை கேட்டு நடுவர்கள் மெய் மறந்து பாராட்டி இருந்தனர். நடுவர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு போட்டியாளர்களான அறிவழகன் மற்றும் அருள் இருவரும் அந்த மேடையில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கண்கலங்கி இருந்தனர். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சமீபத்தில் தான் ஜூனியர்களுக்கான ஜூனியர் லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வானார். அவரைத் தொடர்ந்து ரன்னராக ஹேமித்ரா தேர்வு செய்யப்பட்டார். அது முடிவடைந்த அடுத்த வாரத்திலேயே சீனர்களுக்கான ஆறாவது சீசன் தொடங்கப்பட்டது.

சரிகமப நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 27 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாக இருந்தது. காரணம் இந்த நிகழ்ச்சியில் அதிகமான போட்டியாளர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து வருகின்றனர். அதிலும் நடிகை தேவயானியின் மகள் முக்கிய போட்டியாளராக மாறி இருக்கிறார்.
தேவயானியின் மகள் இனியா
தேவயானியின் மகளுக்கு இவ்வளவு திறமையா? என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. தேவயானி சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகையாக இருப்பதால் அவர் தன்னுடைய மகளுக்கு சினிமாவில் வாய்ப்பு வேண்டி எந்த பிரபலத்திடம் பேசினாலும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தேவயானியின் மகள் தன்னுடைய திறமையால் மக்கள் மத்தியில் நான் பிரபலமாக வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.
பல தரப்பட்ட போட்டியாளர்
அதுபோல இலங்கையில் இருந்தும் சில போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மெக்கானிக் ஒருவர் இந்த நிகழ்ச்சியால் பாடகராக மாறி இருக்கிறார். அதுபோல பல்வேறு சூழ்நிலைகளில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சோக கதை பலரையும் வியக்க வைத்தது. அடிமட்டத்தில் இருக்கும் போட்டியாளர்களும் கூட அவர்களுடைய திறமையால் முன்னேறலாம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக இருக்கிறது.
மாமன்னன் பாடல்
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் இரண்டு போட்டியாளர்கள் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் தற்போது வெளியான ப்ரோமோவில் அறிவழகன் மற்றும் அருண் என்ற இரண்டு போட்டியாளர்களும் பாடி இருக்கின்றனர். அதில் "மாமன்னன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "மலையில தான் தீ பிடிக்குது ராசா" என்ற பாடலை பாடியிருந்தார்கள்.
கண் கலங்கிய போட்டியாளர்கள்
இதை கேட்ட அங்கிருந்த அனைவருமே கண்கலங்கி அழுது இருந்தனர். அப்போது நடுவர்கள் இந்த பாடலை பாடும் போதே உங்களுடைய வலி வேதனை தெரிகிறது. இதில் அனுபவப்பட்டவர்களால் தான் இவ்வளவு அருமையாக பாடல்களை பாட முடியும். நீங்கள் பாடும் போது உங்களுடைய வேதனைகள் தெரிகிறது என்று பாராட்டி இருந்தனர். பிறகு அறிவழகன் மற்றும் அருண் இருவருக்கும் கோல்டன் ஷவர் கொடுக்கப்பட்டது. அதுபோல இந்த சீசனில் பெயர் சொல்வதற்கு இந்த பாடல் போதும் என்று நடுவர் சொன்னதை கேட்டு அறிவழகன் மற்றும் அருண் இருவரும் மேடையில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கண்கலங்கி இருந்தனர். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இவர்கள் இருவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications