சாக்லேட் பாய் அர்ஜூன் சாருக்கு கல்யாணம் ஆயிருச்சா.. அவங்க ரொம்ப பொசசிவாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பெண்களின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் சிபு சூரியனுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்ற இன்ஸ்டாகிராம் போஸ்ட் பார்த்து அவருடைய ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைத்து விட்டது.

என்னதான் பாப்புலர் நடிகராக இருந்தாலும் தன்னைப்பற்றி எதுவுமே வெளிக்காட்டிக் கொள்ளாத ரோஜா சீரியல் அர்ஜுனை பற்றி தெரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் என்னது இவரா இப்படி என்று புலம்பி வருகின்றனர்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இவருக்கு என்கேஜ் முடிந்துவிட்டது என்று செய்திகள் பரவி வந்த நிலையில். இல்லை இல்லை திருமணமே முடிந்துவிட்டது என்று அவர் பேசிய வீடியோஸ்கள் தான் இப்போ செம வைரல்.

ரசிகர்களுக்கு செம்ம அதிர்ச்சிதான்

ரசிகர்களுக்கு செம்ம அதிர்ச்சிதான்

"என்னை யாரும் விரும்புவதில்லை" என்று ஒரு போதும் சொல்லாதீர்கள் எப்போதும் என்னை போல் யாரும் இல்லை என்று சொல்லுங்கள். என தன்னம்பிக்கையான போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு எனர்ஜியை ஊட்டிய சிபு சூரியன் ரசிகர்களின் கேள்விகளுக்கும் ஷாக் ஆகி போய்விட்டார். இதுவரைக்கும் இவருக்கு திருமணம் முடியவில்லை என்று பல பெண்கள் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்ஸ்டாகிராமில் வலம் வரும் இவருடைய போட்டோவை பார்த்து பலபேர் பெரிய அதிர்ச்சி அடைந்து ஷாக்கில் இருந்து மீளவில்லை என்று இவருடைய போஸ்ட்க்கு ரசிகர்கள் போடும் கமெண்ட்ஸ்களிலிருந்து தெரிகிறது.

ஓவர் ஹீரோயிசம் தான்

ஓவர் ஹீரோயிசம் தான்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு சிலர் அடிமைகளாகவே மாறிவிட்டனர். அதற்கு அந்த சீரியலின் ஹீரோவும் ஒருவர். ஹீரோ என்றாலே ஓவர் ஹீரோயிசம் காட்டினால் தான் கெத்து என்பதுபோல இவருடைய ஆக்டிவிட்டி ரசிக்கும் ரசிகர்களின் அன்பு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தான் இவர் தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் இதுவரைக்கும் எந்த செய்திகளையோ வெளியிட்டதே கிடையாது. இவருடைய இன்ஸ்டாகிராமில் கூட இவர் தன்னுடைய போட்டோக்களை மட்டுமே அப்லோட் செய்து கொண்டிருக்கிறார். தன் குடும்பத்தை பற்றி எந்த போட்டோஸ்களையும் போட்டது கிடையாது.

கண்டுபிடித்த ரசிகர்கள்

கண்டுபிடித்த ரசிகர்கள்

அதனால்தான் இவருக்கு இன்னும் திருமணம் முடியவில்லை என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவர் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்பதை தெரிவித்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் இவருடைய ரசிகர்கள் வெறிகொண்டு இவருடைய மனைவியின் போட்டோக்களையும் தேட ஆரம்பித்திருக்கின்றனர். ஒருவழியாக போட்டோவை கண்டுபிடித்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஃபேன்ஸ் பேஜ்களில் அப்லோட் செய்து இருக்கின்றனர். இந்த போட்டோக்களை பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

அப்போ போச்சா....

அப்போ போச்சா....

தற்போது ரோஜா சீரியலில் இவருடைய வாதத்தை பார்ப்பதற்காக பலர் காத்திருக்கின்றனர். எப்படியாவது ரோஜாவை ஜெயிலிலிருந்து இவர் வெளியே கொண்டு வந்து விட மாட்டாரா, அதற்கு என்ன செய்யப் போகிறாரோ? என்று ஆர்வமாக ஒவ்வொரு எபிசோடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தாலும் எதற்காக இவர் திருமணம் முடிந்ததை பற்றி கூறவில்லையே என்று தான் பலர் கேட்டு வருகின்றனர்.

பதிலயே காணலையே

பதிலயே காணலையே

ஆனால் அதற்கு அவர் என்னுடைய பர்சனல் வேறு குடும்பம் வேறு இரண்டையும் ஒன்றாக சேர்க்க நான் ஆசைப்படவில்லை. ஏதாவது விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்னுடைய மனைவியை அறிமுகப்படுத்தலாம் என்று காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இவர் திருமணத்தை பற்றி சொல்லாத காரணத்தால் இவருடைய தீவிரமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரிடம் செல்ல சண்டையும் போட்டு வருகின்றனர். இவருடைய மனைவியும் இவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை பார்த்து பலருக்கு ஃபீலிங்க் ஆக இருந்தாலும் தங்களுடைய திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+