ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாக்கியா.. கோபிக்கு போட்டியாக இப்படி ஒரு முயற்சியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக பாக்கியா கேரக்டரில் நடிக்கும் நடிகை சுசித்ரா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியில் பாக்கியலட்சுமி சீரியல் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியல் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களில் முக்கிய கேரக்டரில் பாக்கியாவாக நடிகை சுசித்ரா நடித்து வருகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

சுசித்ரா ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் கணவர் மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் அவமானப்படுத்தி ஒதுக்கி வைத்தனர். ஆனால் அதிலிருந்து எப்படி மீண்டு வந்து தன்னுடைய திறமையை காட்டி தன்னுடைய குடும்பத்தை இன்னும் தாங்கி நிற்கிறார் என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.

பாக்கியாவின் போராட்டங்கள் மற்றும் அவருடைய முயற்சிகளை பாராட்டும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோல இந்த சீரியலில் பாக்கியாவை வேண்டாம் என்று விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்து
போன கோபிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தான் இந்த சீரியலில் வில்லனாக இருக்கிறார்.

ஆனாலும் கோபி செய்யும் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் வகையில் தான் இருக்கிறது. என்ன தான் கோபி பாக்கியாவுக்கு பிரச்சனைகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் கடைசியில் பாக்கியா கோபிக்கு பல்பு கொடுத்து விடுகிறார். அதுபோல இப்போது நெஞ்சு வலியில் துடித்த கோபியை பாக்கியா காப்பாற்றி இருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதுமட்டுமல்லாமல் கோபி தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவோடு மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கிறார். தியாக சுடராக இருக்கும் பாக்கியா ராதிகாவும் கோபியும் தன் வீட்டில் இருப்பதற்கு மீண்டும் சம்மதித்திருக்கிறார். ஏற்கனவே இதுபோல இரண்டு முறை கோபி பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கிறார்.

ஆனால் சில மாதங்களில் ஏதாவது பிரச்சனையை கோபி இழுக்க பிறகு அவரை பாக்கியா துரத்திவிட்டு இருக்கிறார். இப்போது பாக்கியா தான் கோபியை வெளியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்கியா கொடுத்த 10 நாள் முடிந்து விட்டது என்று ராதிகாவே கிளம்பி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீரியலில் பாக்கியாவாக நடித்துக் கொண்டிருக்கும் சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

television baakiyalakshmi serial vijay tv

சீரியலில் கதைப்படி இவர் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக அதுவும் பாக்கியாவின் குழந்தைகளுக்கு கல்யாணம் முடிந்து குழந்தைகளே பிறந்து விட்ட கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது அவர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள்.

அதுபோல தினமும் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலையில் வாக்கிங் போகும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு குட்மார்னிங் சொல்வார். ஆனால் இன்று சதீஷ்க்கு போட்டியாக சுசித்ராவும் ரசிகர்களுக்கு குட்மார்னிங் சொல்லி புகைப்படம் வெளியிட்டிருக்கும் நிலையில் சீரியலில் தான் பாக்கியா கோபிக்கு போட்டியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்றால் இப்போது நிஜத்திலும் கோபியை தோற்கடிக்க தொடங்கி விட்டாரா என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+