பாக்கியலட்சுமி: உங்கள அம்மா மாதிரி நினைச்சேனே? பாக்யா கேட்ட கேள்வி.. தலை குனிந்த ஈஸ்வரி! இனி கதை இதுவா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியையும் பாக்யாவையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஈஸ்வரி பிளான் போட்ட நிலையில், அதை மொத்த குடும்பத்தின் முன்பும் ஈஸ்வரி சொல்லி வட்டதால் பாக்கியா ஈஸ்வரியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடு எதிர்பார்க்காத சில அதிசயங்கள் நடந்து இருக்கிறது. இதுவரைக்கும் பாக்கியா பல துணிச்சலான முடிவுகள் எடுத்து பார்த்திருப்போம். ஆனால் இன்று பாக்கியா ஈஸ்வரி இடம் பல நெத்தியடி கேள்வி கேட்டிருந்தார். இத்தனை நாளா இந்த பாக்கியம் எங்கே போயிருந்தார் என்று தான் சொல்ல வைத்தது.

அதாவது பாக்கியா ராதிகாவை பற்றி சொன்னதும் கோபி ராதிகாவை போய் பார்க்க போறேன் என்று கிளம்பி போகிறார். இதனால் கோபமான ஈஸ்வரி கோபி என்னை விட்டு போக மாட்டேன் என்று சொன்னானோ இப்போ ராதிகா வீட்டுக்கு போயிட்டான். அவன் திரும்ப இந்த வீட்டுக்கு வந்தா தானே உன் கூட சேர்ந்து வாழ்வான் என்று ஈஸ்வரி சொல்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாக்கியா கடும் கோபப்படுகிறார். அப்போது ஈஸ்வரி நான் என் பையன் கிட்ட உன் கூட சேர்ந்து வாழ சொல்லியிருக்கிறேன் அவனும் அதற்கு மறுப்பு சொல்லல, என்று சொன்னதும் பாக்யாவுக்கு செம கோவம் வருது. உங்க பையன் நம்ம யாரும் வேண்டான்னு விட்டுட்டு போன பிறகு நான் உங்களை நல்லா தானே பாத்துக்கிட்டேன்? இனி உங்க பையன் கூட சேர்ந்து வாழ்வேன்னு நீங்க கனவுல கூட நினைக்காதீங்க.
அவர் என்னைக்கு என் கூட இருந்துட்டு இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்து கொண்டு இருந்தாரோ அன்னைக்கே நான் அவரை மனசுல இருந்து தூக்கி போட்டுட்டேன் என்று கோபமாக திட்ட, அதற்கு ஈஸ்வரி பசங்களோட வாழ்க்கை யோசித்து பார்த்தியா என்று சென்டிமெட்டாக அட்டாக் பண்ணுகிறார்.

அதற்கு பாக்கியா அவர் விட்டுட்டு போனதில் இருந்து என் பசங்களோட வாழ்க்கையை நான் பார்த்துட்டு தான் இருக்கிறேன். அவர் ஒரு அயோக்கியன், துரோகி என்று சொல்ல ஈஸ்வரி பாக்கியா என்று கத்துகிறார். உங்களுக்கு உங்க பையன் பாசம் வேணும்னா கண்ணை மறைக்கலாம். ஆனா என்ன பொறுத்த வரைக்கும் அவர் ஒரு அயோக்கியன் தான்.
அவர் கூட நான் வாழ்வேன்னு நீங்க நினைக்கிறது மிகப்பெரிய தப்பு. எனக்குன்னு சுயமரியாத இருக்கு அதை சீண்டி பாக்காதீங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன். உங்க மேல அத்தை என்ற ஒரு மரியாதை இருக்கு அதை தூக்கி போடறதுக்கு வச்சிறாதீங்க என்று மிரட்டி இருக்கிறார். இந்த காட்சிகள் இன்று அனல் பறக்கும் வகையில் இருந்தது.
அதே நேரத்தில் நாளைக்கான ப்ரோமோவில் கோபி ராதிகா மற்றும் மயூவை பாக்யா வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். அதை பார்க்கும்போது மீண்டும் முதலில் இருந்தா? என்று தான் கேட்க தோணுகிறது. ஏற்கனவே கோபி பாக்கியாவிடம் வீட்டை விற்றுவிட்டு போன பிறகு இதுபோல இரண்டு முறை நடந்தாச்சு. இப்போ மூன்றாவது முறையா மீண்டும் கோபி வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
சௌந்தர்யாவிடம் நீ மன்னிப்பு கேட்கணும்! விஷாலிடம் பாக்கியலட்சுமி சீரியல் நேகா கறார்.. செம சம்பவம்
கோபியை தொடர்ந்து ராதிகாவும் மயூவும் வருகிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இதுக்கு இல்லையா சார் எண்ட் என்பதுதான் பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது. ஏற்கனவே நான் வீட்டை விட்டு போக போறேன் என்று பாக்யா பிரச்சனை செய்ததால் இனி வீட்டை விட்டுப் போவாரா என்ற கேள்விகள் எழுகிறது.

ஆனால் இன்று பாக்யாவாக நடிக்கும் இந்த சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பாக்யாவும் ராதிகாவும் மீண்டும் கிச்சனில் ஒன்றாக சமைப்பது போன்ற வீடியோவை ஷேர் செய்திருக்கிறார். இதனால் இனி மீண்டும் ஒரே வீட்டில்தான் ராதிகாவும் பாக்கியாவும் வசிக்க போகிறார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications