தற்கொலை முயற்சி செய்த இனியா.. கதறி அழும் பாக்கியா.. கட்சி மாறிய கோபி.. எழில் எடுக்கும் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தற்கொலை முயற்சி செய்கிறார்.

கோபி ராதிகாவுக்கு ஆதரவாக பேசியதால் விரக்தியில் இனியா தவறான முடிவு எடுக்கிறார்.

விஷயம் தெரிந்த பாக்கியா கதறி அழுது கொண்டு ஓடி வருகிறார்.

நல்லாவே நடிக்கிறீங்க பாக்யா

நல்லாவே நடிக்கிறீங்க பாக்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா கேண்டினுக்கு வர செல்வி மற்றும் பாக்கியா இருவரும் குட் ஈவினிங் மேடம் என்று சொல்கின்றனர். உங்களுக்கு ஈவினிங் ஆயிடுச்சுன்னு தெரியுதா? அதெல்லாம் இருக்கட்டும் கேக் ரெடியா என கேட்க, பாக்யாவும் செல்வியும் கேக் செய்ய முயற்சி செய்து வராதது போல ராதிகாவிடம் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏமாந்த ராதிகா

ஏமாந்த ராதிகா

அதோடு இன்னும் இரண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க என்று கெஞ்ச ராதிகா அதெல்லாம் வாய்ப்பே கிடையாது. நீங்க கேண்டினை காலி பண்ணுங்க போகும்போது நான் கேண்டின் பொருள்கள் எல்லாத்தையும் செக் பண்ணுவேன். டேமேஜ் ஏதாவது இருக்கான்னு பார்ப்பேன். இப்ப ப்ரீயா தான் இருக்கேன். இப்பவே பார்க்கிறேன் என்று கேண்டின் உள்ளே போகிறார்.

கெத்து தான் பாக்கியா

கெத்து தான் பாக்கியா

உள்ளே போன ராதிகா அங்கே விதவிதமாக கேக்குகள் தயார் செய்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன மேடம் ஒரு கேக்குக்காக இவ கேண்டினை காலி பண்ணிட்டு போய் விடுவா என்று நினைத்தீர்களா? உங்கள மாதிரி படிச்சு நாலு பேரோட வழிகாட்டுதலோடு நான் இங்கு வரல. எதுவுமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு போராடி இங்கே வந்திருக்கிறேன். சாதாரணமான ஒரு கேக்குக்காக மூட்டையை கட்டிக் கொண்டு கிளம்பி போகமாட்டேன் என்று பாக்கியா கெத்தாக பேசிக் கொண்டிருக்கிறார்.

கடுப்பான ராதிகா

கடுப்பான ராதிகா

அதைக் கேட்டு கடுப்பான ராதிகா இதெல்லாம் எந்த கடையில வாங்கி வந்தீங்க? என்று கேட்க இப்படி சில்லறை தனமான கேள்வி கேட்காதீர்கள் என கேக் செய்யும் முறையை சொல்லி பாக்யா விளக்கம் கொடுக்கிறார். அதை கேட்டு ராதிகா மேலும் கடுப்பாக கேக் சாப்பிட்டு பாருங்க என சொல்ல, ராதிகா இவ்வளவு நேரம் கேக் செய்ய வரலைன்னு என்கிட்ட நடிச்சீங்களா? என்று கோபப்பட்டு பாக்கியாவை திட்டி விட்டு கிளம்புகிறார்.

இனியாவை திட்டும் கோபி

இனியாவை திட்டும் கோபி

அடுத்ததாக வீட்டில் இனியா போன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா போனை வச்சுட்டு போய் தூங்கு என்று இனியாவை திட்ட இனியா அதற்கு எதிர்த்து பேசுகிறார். கோபி நீ எதுக்கு எது சொன்னாலும் அவளை எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க என்று கேட்க நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். நீங்களும் என்ன திட்றீங்க என்று இனியா அழுகிறார். கோபி நானும் ஆரம்பத்திலிருந்து பாத்துட்டு தான் இருக்கேன். நீ அவள் எது கேட்டாலும் பொறுமையா பதில் சொல்ல மாட்றா என்று சொல்லி ராதிகாவிற்கு ஆதரவாக போனை வச்சிட்டு போய் தூங்கு என்று இனியாவை திட்டுகிறார்.

இனியாவின் தப்பான முடிவு

இனியாவின் தப்பான முடிவு

பிறகு வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு டாடி ரொம்ப மாறிட்டாரு. இனி என்னால் அங்கேயும் போக முடியாது. இங்கேயும் இருக்க முடியாது என்று அழுதுகிட்டு இருந்த இனியா திடீரென்று ராமமூர்த்தி சாப்பிடும் மாத்திரைகளை எடுத்து போட்டுக் கொள்கிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் இனியாவிற்கு பயம் வந்துவிட, தாத்தாவை எழுப்பி நான் உங்களுடைய மாத்திரையை சாப்பிட்டு விட்டேன் என்று கூற, ராமமூர்த்தி கோபியை எழுப்பி இனியாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு செல்கின்றனர். ஹாஸ்பிடலுக்கு வந்ததும் ராமமூர்த்தி பாக்யாவிற்கு போன் போட்டு இனியா மாத்திரை சாப்பிட்டு ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல பாக்யா பதறி துடிக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+