இனியாவோடு வீட்டை விட்டு கிளம்பும் கோபி.. கோபத்தில் ராதிகா அம்மா கேட்ட கேள்வி.. அடுத்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கான எபிசோடு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

அதில் முதல்முறையாக ராதிகாவின் அம்மாவை அவர் பேசிய வார்த்தைக்காக கோபி எதிர்த்து பேசி அவமானப்படுத்துகிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 23th Episode full update

அதே நேரத்தில் கோபி இனியாவிற்காக செய்த செயலைப் பார்த்து இனியா சந்தோஷப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டு வாசலில் வைத்து இனியாவும் கோபியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா செய்து கொண்டிருக்கும் வேலைகளை பற்றி நக்கலாக கோபி பேச இனியா பதிலடி கொடுக்கிறார். பிறகு அந்த பழனிச்சாமி எதுக்கு இங்க வாரான் கொஞ்ச நாள் தானே பழக்கம் என்று திட்ட அதற்கு இனியா உங்களுக்கு எதுக்கு டாடி பழனிச்சாமி அங்கிளை பார்த்தால் பிடிக்கல என்று கேட்கிறார்.

அதைக் கேட்டு கோபி அதற்கு சரியாக பதில் சொல்லாமல் சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்தநாள் காலையில் எழில் நிலாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது பற்றி பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது ஈஸ்வரி பாக்யா எல்லா வேலையும் முடிச்சிட்டியா என்று கேட்க, பாக்யாவும் முடிச்சிட்டேன் அத்தை என்று சொல்ல அந்த நேரத்தில் ஈஸ்வரி செல்வியை கூப்பிட்டு கொண்டு போய் யோகா சொல்லிக் கொடுக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 23th Episode full update

இதைப் பார்த்து எழிலும் பாக்கியாவும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அடுத்ததாக காலேஜில் இனியாவும் பாக்கியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா தனக்கு அசைன்மென்ட் கொடுத்திருப்பது பற்றி சொல்லி நான் அதற்காக கேரளாவுக்கு போக வேண்டும் என்று சொல்ல, பாக்கியா எப்படி போக என்று கேட்க, நான் டாடி கூட தான் போகப் போறேன். அவர் கிட்ட சொல்லிட்டேன். அவர் நேரில் வந்து பேசுறேன் என்று சொல்லி இருக்காரு என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக அங்கு வரும் கோபி இனியாவிடம் கேரளாவுக்கு கட்டாயமாக நாம போகலாம் என்று சொல்லுகிறார். பிறகு இரவு கோபி ராதிகா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மயூவை நாளைக்கு ஷாப்பிங் கூட்டிட்டு போறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போன் வர கோபி தனியாக போய் பேசி விட்டு வருகிறார்.

பழனிச்சாமி பற்றி ராதிகா சொன்ன வார்த்தை.. கதறி அழுத பாக்கியா.. கோபியின் வில்லத்தனம்..திடீர் திருப்பம்
என்ன என்று ராதிகா கேட்க அதற்கு கோபி கேரளாவுக்கு கூட்டிட்டு போக போறேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா எங்க கிட்ட இதெல்லாம் எதுவுமே சொல்லல என்று சொல்ல, அதைத்தொடர்ந்து ராதிகா அம்மா, "இதெல்லாம் சரியில்ல போனவாரம் முழுக்க இனியாவை காலேஜில் சேர்க்க போறேன்னு சொன்னீங்க. இப்ப திரும்ப கேரளாவுக்கு போக போறீங்களா? ஏன் இனியாவுக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கு, தாத்தா இருக்காரு அவங்க யாரும் கூட்டிட்டு போக மாட்டாங்களா?" என்று கேள்வி கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 23th Episode full update

அதற்கு கோபமான கோபி, "நான் பாக்யாவை மட்டும் தான் டைவர்ஸ் பண்ணி இருக்கேன். என்னுடைய குடும்பத்தை இல்ல. எனக்கு எல்லா குழந்தையும் ஒன்றுதான். எனக்கு இனியாவும் ஒன்றுதான் மயூவும் ஒன்னு தான். என் குடும்பத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை" என்று கோபமாக திட்டி விட்டு கிளம்புகிறார்.

கோபி இனியா உடன் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருப்பதை ராதிகாவின் அம்மா பார்த்து ராதிகாவிடம் போட்டுக் கொடுக்கிறார். இதனால் கோபி வந்ததும் ராதிகா அம்மா பேசினது தப்புதான். உங்க குடும்பத்தை பற்றியே பேசுறீங்களே எங்களைப் பற்றி எப்பவாவது பேசி இருக்கீங்களா? என்று கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+