அவமானப்பட்டு வீட்டை விட்டுப் போகும் கோபி- ராதிகா.. கதறி அழுத ஈஸ்வரி.. கடைசியில் இப்படியா ஆகணும்?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பணத்தை கொடுத்து விட்டதால் அவமானத்தில் ராதிகா கோபியை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்.
இனி கோபிக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாக்யா கெத்தாக பேசியிருந்தாலும் கடைசியில் பத்திர விஷயத்தில் அதிர்ச்சியான பதிலை கூறுகிறார்.

அதே நேரத்தில் ஈஸ்வரி கோபியை வீட்டை விட்டு அவமானப்படுத்தி அனுப்பி விட்டு பிறகு அழுது கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஜூலை 12ஆம் தேதிக்கான பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபியின் அப்பா பணத்தை வாங்கிகிட்டு இங்கேயே இருந்திரலாம் என்று யோசிக்கிறியா? மரியாதையா? இங்கிருந்து போயிரு என்று சொல்ல கோபி நீங்க எப்பவுமே பாக்கியாக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க நான் எங்க அம்மா கிட்ட பேசிக்கிறேன் என்று ஈஸ்வரியிடம் சென்று நான் இங்கு இருந்து போறது கவலையா? இல்லையா என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி நான் எதுக்கு வருத்தப்படனும் இவளோட அம்மா என்னை போலீஸ்ல பிடிச்சு கொடுக்க பார்த்தாலே அப்போ நீ வருத்தப்பட்டியா? இவ என்ன வீட்டை விட்டு போக சொன்னாலே அப்ப ஏதாவது கேட்டியா? குத்துக்கல் மாதிரி தானே நின்ன? உனக்கு பாசம் இருந்துச்சா? இருக்கிற மாதிரி நீ நடிச்சுக்கிட்டு தான் இருக்கா? உண்மையான பாசம் எங்களுக்கு தான் இருக்கு என்று திட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து என் பிள்ளை செழியன் இருக்கான், அவன் கிட்ட பேசுகிறேன் என்று சொல்ல, நீங்க குடிச்சிட்டு ரோட்ல கிடக்கும்போது உங்கள கூட்டிட்டு இங்க வந்திருக்க கூடாது.. அப்படி கூட்டிட்டு வந்திருக்காட்டி இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா.? இது மட்டும் தான் எனக்கு கவலை என்று சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார்.

தொடர்ந்து நீங்க யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணலனாலும் என் பொண்ணு இருக்கா, இனியா எனக்காக பேசுவா என்று சொல்ல, இனியா பாக்கியா பின்னாடி போய் நின்று உங்களால் நாங்க பட்ட கஷ்டம் போதும் என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து கோவமான பாக்கியா மிஸ்டர் கோபி நான் உங்ககிட்ட பணத்தை கொடுத்து ஏமாறனும் என்று எங்களுக்கு ஆசை இல்லை என்று சொல்ல, ராமமூர்த்தியும் நாளைக்கு நீ வீட்டை எங்க பேர்ல மாத்தி தரவில்லை என்றால் நடக்கிறதே வேற என்று திட்டுகிறார்.
பிறகு ராதிகாவும் கோபியும் வீட்டை விட்டு வெளியே போகின்றனர். அப்போது பாக்யா மொத்த குடும்பத்தோடு வாசலில் நின்றபடி கதவை இழுத்து மூடுடா என்று கெத்தாக பேசுகிறார். பிறகு வீட்டிற்குள் வந்ததில் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பாக்கியா கைய பிடித்து பாக்யாவுக்கு நன்றி சொல்லி அழுகின்றனர்.

அப்போது ராமமூர்த்தியிடம் இனி பத்திரம் எப்படி போடணும்ங்கிறதை நீங்களே பாத்துக்கோங்க மாமா. பத்திரத்தை உங்க பேர்ல தான் போடணும் என்று அனைவருக்கும் பாக்கியாவுக்கு அதிர்ச்சி கொடுக்க, அதற்கு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் வீட்டை பாக்கியா பெயர்ல எழுத சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications