காலேஜில் சேர ஆசைப்படும் பாக்கியா.. அதிர்ச்சி கொடுத்த ஜெனி.. கோபிக்கு கிடைத்த அவமானம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இனியாவை காலேஜில் சேர்த்துவிட்டு காலேஜை பார்த்ததும் தானும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
பாக்யாவை காலேஜில் சேர்ந்து படிக்குமாறு பழனிச்சாமி அட்வைஸ் கொடுக்க பாக்யா என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதிக்கான எபிசோட்டில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியாவின் அட்மிஷன் முடிந்து பாக்யா, இனியா மற்றும் கோபி மூவரும் வெளியே வருகிறார்கள். அப்போது இனியா பாக்யாவிடம் "எப்படி இப்படியெல்லாம்.?" என்று கேட்கிறார். அதற்கு பாக்யா, "என்ன பத்தி என்ன நெனச்ச.." என்று பெருமையோடு பேசுகிறார்.

இதைப் பார்த்து கோபி கடுப்பானாலும் இனியாவிடம் ஏதாவது சாப்பிடுறியா..? இங்க கேண்டின்ல சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்ல, அதற்கு இனியா வேண்டாம் பசிக்கல என்று சொல்கிறார். பிறகு கோபி "விஸ்காம் படிப்பில் பெரிய பியூச்சர் இல்ல. குழந்தை ஆசைப்பட்டுட்டான்னு சொல்லி எல்லோரும் சேர்ந்து விட்டிருக்காங்க. நாளைக்கு நான்தான் சொன்னேன்னா நீங்களாவது எடுத்து சொல்லி இருக்கலாம் என்று அவ கேட்கும் போது என்ன பதில் சொல்லப் போறீங்க.." என்று கேட்கிறார்.
அதற்கு பாக்கியா நான் ஒன்னும் விசாரிக்காமல் இங்க வந்து கொண்டு விடல. இனியா படிக்கும் விஸ்காம்க்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு என்று அதைப் பற்றி விரிவாக பேசிக் கொண்டிருக்க, அதைக் கேட்டு கோபி கடுப்பாகி போதும் நிறுத்து என்று கூறி இனியாவை கேண்டின்க்கு அழைத்துச் செல்ல, பாக்யா காலேஜை சுற்றி பார்க்கிறார். பிறகு ஒரு கிளாஸ் ரூமில் சென்று அந்த கிளாசை ரொம்பவே சந்தோஷமாக பார்த்துக் கொண்டு போர்டில் தன்னுடைய பெயரை எழுதி ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு அங்கே ஆள் வந்து திட்ட பயந்து போய் பாக்யா வெளியே வந்து இனியாவிடம் காலேஜ் வந்தது பற்றியும், தனக்கு கிடைத்த சந்தோஷத்தை பற்றியும் விவரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு இனியா, "அம்மா நீ உன் பாட்டுக்கு இங்கே வந்து உட்கார்ந்து விடாதே. அப்படி நீ இங்கே சேர்ந்துட்டா என்னை கேள்வி கேட்டு பாடாய் படுத்திருவா..?" என்று சொல்லி சிரிக்கிறார். அதை தொடர்ந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போகும் பாக்கியா அங்கே காலேஜில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி எனக்கு காலேஜ் போய் படிக்கணும்னு ஆசை. ஆனா அப்பா இறந்து போனதால. அந்த நேரத்துல படிக்க முடியல என்று வருத்தப்படுகிறார்.
அதற்கு பழனிச்சாமி இப்போதும் படிக்கலாம் என்று சொல்லி பாக்யாவுக்கு மோட்டிவேஷன் கொடுத்து கொண்டு இருக்க, பாக்யாவும் இந்த விஷயத்தைப் பற்றி தான் யோசிக்கிறேன் என்று சொல்லி கேண்டின்க்கு வருகிறார். அங்கேயும் செல்வியிடம் இனியாவை காலேஜில் சேர்த்து விட்டதையும், பழனிச்சாமி சொன்னதையும் பற்றியும் சொல்லி நான் காலேஜ் போகட்டுமா? நீ என்ன சொல்ற என்று கேட்க, அதற்கு சும்மா காமெடி பண்ணிட்டு இருக்காத அக்கா என்று செல்வி கிண்டல் செய்கிறார்.

அதற்குநீ கூட காலேஜில் சேர சொல்லி சொன்ன என்று சொல்ல, அப்போ நான் சும்மா கிண்டலுக்கு சொன்னேன். ஆனா இப்போ இருக்கிற வேலையில் உன்னால அங்க போக முடியுமா? என்று கேட்கிறார். அதைப்பற்றி பாக்கியா யோசிக்கிறார். மறு பக்கம் வீட்டுக்கு சீக்கிரம் வரும் செழியன் ஜெனியின் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி செழியனின் மாற்றத்தை குறித்து சந்தோஷப்பட்டு பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
செழியன் சற்றும் எதிர்பார்க்காமல் இனியாவிற்கு பீஸ் நான் கட்டவா என்று கேட்டது குறித்து சந்தோஷமாக ஜெனி பாராட்டிக் கொண்டிருக்க, செழியன் வளைகாப்பு பற்றி பேசுகிறார். பிறகு வளைகாப்பு முடிந்ததும் அம்மா வீட்டுக்கு போயிடுவேன் என்று ஜெனி சொல்ல, அதற்கு செழியன் அதெல்லாம் போகக்கூடாது. இங்கே தான் இருக்கணும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications