பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை கொலை செய்ய முடிவு எடுத்த பாக்யா.. அவமானப்படுத்தும் பழனிச்சாமி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவும், பழனிச்சாமியும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபத்தில் கோபி பழனிச்சாமியை திட்டுகிறார்.
கோபி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பழனிச்சாமி அவமானப்படுத்துகிறார். இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரிந்ததும் பாக்கியா கடும் கோபத்தில் இருக்கிறார்.

அதனால் கோபமான கோபி பாக்கியா மற்றும் பழனிச்சாமியின் மீது இருக்கும் கோபத்தை எல்லாம் ராதிகாவிடம் காட்ட ராதிகா கடும் கோபத்தில் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை மூன்றாம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா கிச்சனில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க அப்போது பழனிச்சாமி அங்கே வந்து வேலை செய்பவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சுதாகரின் மனைவி வந்து ஒரு டிஷ் சொல்ல மறந்துட்டேன் என்று சொல்லி பக்லா செய்து விடுங்கள் என்று கூறுகிறார்.

அதை கேட்ட பாக்கியா அப்படின்னா என்னன்னு எனக்கு தெரியாது என்று முழித்துக் கொண்டு நிற்க பழனிச்சாமி செய்து விடலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு அந்த ஸ்வீட் ஒரு முறை சாப்பிட்டு இருக்கேன் ஆனா அது எப்படி செய்வது என்பது தெரியாது. எப்படி சமைக்க போறாங்கன்னு தெரியல என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்க அதற்கு பழனிச்சாமி உங்களால் கண்டிப்பாக முடியும் என்று பாக்யாவுக்கு மோட்டிவேஷன் கொடுத்து யூடியூபில் வீடியோவை பார்த்து பாக்கியாவிடம் வந்து டிப்ஸ் கூறுகிறார்.
அப்போது பழனிச்சாமி யூடியூபில் வீடியோ பார்த்து தான் சொல்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பாக்கியா அவரை கிண்டல் செய்தபடியே பிறகு தான் வாங்கி பார்த்து அதை கற்றுக் கொள்கிறார். பிறகு சூப்பராக செய்து முடிக்க அதை சாப்பிட்டு பார்த்து பழனிச்சாமி பாராட்டிக் கொண்டிருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி கோபம் ஆகிறார்.

அந்த நேரத்தில் ராதிகா கோபிக்கு போன் செய்து எனக்கு தனியாக இருக்க போர் அடிக்குது ரூமுக்கு வாங்க என்று சொல்ல, பாக்கியா மீது இருக்கும் கோபத்தில் ரூமிற்கு சென்ற கோபி ராதிகாவை திட்டுகிறார். இதனால் கோபமான ராதிகா அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.
அதைத்தொடர்ந்து பழனிச்சாமியும் சுதாகரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் கோபி பழனிசாமியிடம் நீங்க எதுக்கு பாக்யா எங்க போனாலும் அவ பின்னாடியே வரீங்க என்று கேட்டு திட்டுகிறார். அதற்கு பழனிசாமி கோபியை தனியாக கூட்டிட்டு போய் இது என்னோட பிரண்டோட பொண்ணு கல்யாணம். இங்க பாக்யா மேடம் சமையல் வேலை பார்க்க வந்திருக்காங்க. நீங்க தேவை இல்லாம பேசி பிரச்சனை பண்ணாதீங்க. நானும் உங்கள மாதிரி கத்தி பேசினா இங்க நல்லா இருக்காது என்று சிரித்தபடியே திட்ட, என்ன? மிரட்டுறீங்களான்னு கோபி கேட்கிறார்.

மறுபக்கம் சுதாகர் செல்வியிடம் இது யாருமா, இவருக்கும் பழனிக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க? இது பாக்கியா மேடத்தோட புருஷன் என்று செல்வி பதில் என்று சொல்கிறார் பிறகு கோபி அங்க இருந்து போனதும் சுதாகர் போய் விடுகிறார். அப்போது அங்கு வரும் பழனிச்சாமி கோபி தான் பிரிஞ்சு போயிட்டாரு இல்ல. இனி அவர மேடத்தோட புருஷன் என்று சொல்லாதீங்க என்று சொல்கிறார்.
பிறகு இதை எல்லாம் செல்வி பாக்யாவிடம் போட்டுக் கொடுக்க பாக்யா பழனிச்சாமிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோபியின் மீது கடும் கோபத்தில் அவர் என் கண் முன்பு வந்தால் நான் கத்தியை எடுத்து குத்தி விடுவேன் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அந்தப் பக்கமாக அப்போது கோபி வந்து நின்று பாக்கியாவை பார்த்து ஏய்... என ஆவேசமாக போட அதற்கு பாக்கியா ஏய்... என்று பயங்கரமாக சத்தம் போடுகிறார். அதைக் கேட்டு கோபி பயந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications