கோபி பற்றிய ரகசியங்களை ராதிகாவிடம் உடைத்த எழில்.. பழனிச்சாமியால் குடும்பத்திற்குள் வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யா லைசென்ஸ் திருடிட்டு போனது பற்றி பழனிச்சாமி இடம் எழில் கேட்டு தெரிந்து கொண்டு அதை ராதிகா முன்பு கோபியிடம் கேட்டு சண்டை போடுகிறார்.

இதனால் ராதிகா கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பழனிச்சாமி லைசன்ஸை போட்டோ எடுத்து அனுப்பியதால் பாக்கியாவை போலீசார் அங்கிருந்து போக அனுமதிக்கின்றனர். பிறகு காரில் பாக்கியா, ஈஸ்வரி, செல்வி, இனியா நான்கு பேரும் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா பற்றி ஈஸ்வரி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்
அதோடு இனியா நான் டிராவலிங் ப்ராஜெக்ட் ஒன்று செய்யணும் என்று நினைத்திருந்தேன் இனி அதை சந்தோசமாக செய்யலாம் நமக்கு நிறைய அனுபவம் கிடைச்சிருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் காரில் பாட்டு போட்டு ஆட்டம் போட்டு கொண்டு வருகின்றனர். பிறகு வழியில் டீ குடித்துக் கொண்டு கிளம்பி வந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வீட்டில் எழில் இனியாவுக்கு போன் போட்டு பழனி சாமியால் காப்பாற்றப்பட்டது பற்றி தெரிந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து பழனிச்சாமி சாருக்கு எப்படி அம்மாவோட லைசென்ஸ் கிடைச்சிருக்கும் என்று தெரியவில்லையே என்று வீட்டில் எழில் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு நான் பழனிச்சாமி சாரை சந்தித்து நன்றி சொல்லிவிட்டு வருகிறேன் என்று கிளம்பி போகிறார். அதோடு பழனிச்சாமி இடம் பேசிக் கொண்டிருக்கும் எழில் உங்களுக்கு எப்படி லைசன்ஸ் கிடைத்தது. அம்மா ஏதேனும் உங்ககிட்ட டூப்ளிகேட் தந்து வைத்திருந்தாங்களா? என்று கேட்க, இல்லை என்று கோபி உடைத்து தூக்கி எறிந்த லைசென்ஸ் கொடுக்கிறார்.
அதை பார்த்து என்ன ஆச்சு இது எப்படி இப்படி உடைந்தது என்ன நடந்தது சொல்லுங்க என்று மேலும் மேலும் பழனிச்சாமிடம் எழில் கேட்டுக்கொண்டே இருக்க, பழனிச்சாமி எழிலை சமாளிப்பது போன்று கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை நம்பாமல் எழில் மேலும் கேள்வி கேட்க பிறகு கோபி செய்த செயலை சொல்லி நீங்க எதுவும் பிரச்சனை செய்யக்கூடாது என்று எழிலிடம் சொல்கிறார்.
அதற்கு சரி என்று சொன்ன எழில் நேராக கோபியின் வீட்டிற்கு வருகிறார். அங்கு கோபிக்கு தட்டில் சாப்பாடு வைத்து ராதிகா கொடுக்க, இருவரும் மாறி மாறி சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே எழில் வருகிறார். எழிலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கோபி என்ன இங்க வந்திருக்கா என்று கேட்க, உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லையா என்று எழில் திட்டுகிறார். எங்க வந்து என்ன பேசுற என்று ராதிகா கோபப்படுகிறார்.
அதற்கு எழில் கோபி வீட்டிற்கு வந்து லைசன்ஸ் திருடிட்டு போயி அதை உடைத்து போட்ட விஷயத்தை பற்றி சொல்ல ராதிகா அதிர்ச்சி ஆகிறார்.. கூடவே எழில் இருவருக்கும் பிரச்சனை வருவது போன்று பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதைத் தொடர்ந்து நீங்க எதுக்கு லைசென்ஸ் திருடிங்க என்று ராதிகா கேட்க, அதற்காக கோபி அந்த இடியட் என்ன எவ்வளவு கேவலப்படுத்துனா? அதனால் தான் அவளை பழிவாங்க அப்படி பண்ணுனேன் என்று கோபி சொல்ல, ராதிகா கோவப்பட்டு கதவை சாத்திக் கொள்கிறார்.
அடுத்ததாக டூர் போயிருந்த அனைவரும் வீட்டிற்கு வர அவர்களை ராமமூர்த்தி, அமிர்தா, எழில் எல்லோரும் சந்தோஷமாக வரவேற்கின்றனர். பிறகு எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு பாக்கியா செழியன் மட்டும் இல்லாததை வைத்து செழியன் வீட்டிற்கு தினமும் வருகிறானா? என்று கேட்க, சில நாள் வருவதில்லை, ஒரு சில நாட்கள் மட்டும் லேட்டாக வருகிறார். ஆனால் வீட்டில் சாப்பிடுவது இல்லை என்று அமிர்தா சொல்ல, பாக்கியா அதிர்ச்சி அடைந்து யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications