கேட்டரிங் விஷயத்தில் செக் வைத்த ராதிகா.. பாக்யாவுக்கு உதவும் நபர்கள்.. அதிர்ச்சியில் மொத்த குடும்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 27 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா கேட்டரிங்கை காலி செய்ய வேண்டும் என்று ராதிகா புது பிரச்சனை செய்ய அதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதே நேரத்தில் பாக்யா இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு ராதிகாவே வழி செய்து கொடுத்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் கேண்டின் ஆர்டரை கேன்சல் பண்ணியதால் பாக்யா அவரிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனாலும் ராதிகா இப்போ ஆபிஸ் மொத்தமும் என்னுடைய கண்ட்ரோலில் இருக்கு நான் சொல்றது தான் எல்லோரும் செய்வாங்க என்று சொல்கிறார் ஆனாலும் பாக்கியா கெஞ்சி கொண்டே இருக்கிறார்

அதைத்தொடர்ந்து அமிர்தாவின் அம்மா போன் பண்ணி அமிர்தாவிடம் பேசுகிறார். அப்போது உன்னுடைய மாமனார், மாமியார் பேசினார்களா? என்று கேட்க, அதற்கு அமிர்தா அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க, இல்லை சும்மா கேட்டேன் என்று சொல்ல, அதற்கு அமிர்தா நான் அவங்களை போய் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு பதறி போன அமிர்தாவின் அம்மா அதெல்லாம் வேண்டாம். அவங்களை அவங்களே பாத்துக்குவாங்க நீ யோசிக்காமல் இரு என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து பழனிச்சாமியின் அம்மா வீட்டில் கேசரியோடு விதவிதமாக சாப்பாடு செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்து பழனிச்சாமி என்ன விசேஷம் என்று கேட்க ஒரு முக்கியமானவங்க வர்றாங்க அவங்களுக்காக தான் என்று பழனிசாமியின் அம்மா சொல்ல, அதற்கு பழனிசாமி யார் என்று வற்புறுத்தி கேட்க பாக்யாதான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாக்கியா வருகிறார். அவர் அமைதியாக சோகத்தோடு இருப்பதை பார்த்து என்னாச்சு என்று பழனிச்சாமியும் அவருடைய அம்மாவும் விசாரிக்கின்றனர்.

அப்போது பாக்கியா கேன்டீன் கைவிட்டு போன விஷயத்தை சொல்ல, அதைக் கேட்டு பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்து பாக்யாவிற்கு ஆறுதல் கூறுகிறார். அதைத்தொடர்ந்து எதற்காக என்ன வர சொன்னிங்க என்று பழனிச்சாமியின் அம்மாவிடம் பாக்கியா கேட்க, அவர் அப்போதைக்கு எதுவும் சொல்லாமல் சமாளித்து அனுப்புகிறார். பிறகு பாக்யா வீட்டிற்கு வந்து வீட்டில் எல்லோரிடமும் இந்த விஷயத்தை சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதோடு ராதிகா அங்கு வேலை செய்பவர்கள் வோட்டிங் நடத்துகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவர்கள் எனக்கு ஓட்டு போட்டால் நம்ம மீண்டும் கேண்டினில் சமைக்கலாம் என்று சொல்ல அதற்கு ராமமூர்த்தி, எழில், ஈஸ்வரி என்று எல்லோரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதோடு ராதிகாவுக்கு இரக்கம் பார்க்க கூடாது. அவ ஆரம்பத்தில் இந்த வீட்டுக்கு வரும்போது நான் வேண்டாம் என்று சொன்னேன். நீ தான் பாவம் பார்த்தா இப்போ இப்படி எல்லாம் பண்ணுறா என்று ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications