நான் உங்கள மாதிரி நடந்துக்கல.. பாக்யாவை வெளுத்து வாங்கிய ராதிகா.. இனியாவால் வந்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் இனியாவை போலீஸிடமிருந்து காப்பாற்றிய ராதிகா பாக்கியாவிடம் கேட்ட கேள்விகளால் பாக்கியா அதிர்ந்து போய் இருக்கிறார்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கோபி மற்றும் பாக்யாவிற்கு இடையே சமையல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் நாமதான் ஜெயிக்க வேண்டும் என்று ஈஸ்வரி பாக்யாவிடம் சொல்லி இருக்கிறார். பாக்யாவும் போட்டியில் எப்படியாவது ஜெயித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அதுபோல கோபி நானும் இந்த நிகழ்ச்சியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் இதுவரைக்கும் எல்லா சவாலிலும் பாக்கியாவிடம் தான் தோற்றுக் கொண்டே இருக்கிறேன். இந்த முறை நான் தோற்கக் கூடாது என்று கோபியும் போராடிக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் இனியா தன்னுடைய தோழியின் பிறந்தநாள் பங்க்ஷனுக்கு வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தன்னுடைய தோழிகளோடு பப்புக்கு சென்று இருக்கிறார்.

திடீரென எல்லாம் மாறிவிட்டது.. அதிசயம் கிடைத்தது.. குழந்தை பிறந்தவுடன் இர்பான் வெளியிட்ட பதிவு
அங்கு தோழிகள் வற்புறுத்தி டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அங்கு வந்த சீனியர் பசங்க இனியாவின் பிரண்ட்ஸ்களிடம் இனியாவின் நம்பரை கேட்டு பிரச்சனை செய்ததால் அங்கு போலீஸ் வந்து இனியா மற்றும் அவர்களுடைய நண்பர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக இருக்கிறார்கள். அந்த நேரத்தில் இனியா கதறி அழுது கொண்டிருப்பதை அங்கு தன்னுடைய தோழியோடு வந்த ராதிகா பார்த்து போலீஸிடம் பேசுகிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

ஆனால் அவர்கள் முதலில் இனியாவை ராதிகாவோடு அனுப்ப மறுக்கிறார்கள். பிறகு ராதிகா தன்னுடைய அண்ணன் மூலமாக டிஎஸ்பி இடம் பேசி இனியாவை விட்டு விட சொல்கிறார். ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால் இப்போதுதான் மெயின் கிளைமாக்ஸ் என்று சொல்கிற மாதிரி செழியன் இனியாவுக்கு போன் போட்டதும் அங்கு வரவைத்து செழியன் மற்றும் இனியாவிடம் உங்க அம்மா இங்க வந்தா தான் நான் இனியாவை இங்கிருந்து அனுப்புவேன் என்று ராதிகா கறாராக சொல்லி விடுகிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அதோடு இன்று வெளியான ப்ரோமோவில் ராதிகாவே பாக்யாவுக்கு போன் போட்டு பப்பில் நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லி பாக்கியாவை அங்கு வர சொல்கிறார். பிறகு பாக்யா வந்து இனியாவை காரில் கூட்டிட்டு போக முயற்சி செய்யும்போது அவரிடம் ராதிகா நான் நினைச்சிருந்தா என்ன வேணாலும் பண்ணி இருக்கலாம். ஆனால் நான் இனியாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணாத வகையில் நான் காப்பாற்றி இருக்கிறேன்.

ஆனால் நீங்கள் என்ன பண்ணுனீங்க? எனக்கே தெரியாம என்னுடைய குழந்தையை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க. இதைவிட மோசமான சிச்சுவேஷன் உங்க பொண்ணுக்கு வந்த போது நான் உங்கள மாதிரி நடந்துக்கல. இதுதான் பாக்கியலட்சுமிக்கும் ராதிகாவுக்கும் இருக்கும் வித்தியாசம் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகி நிற்கிறார். அடுத்து பாக்யா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Television Baakiyalakshmi Serial vijay TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+