காலேஜில் கோபி பற்றி பாக்கியா சொன்ன வார்த்தை.. கொதித்த ஈஸ்வரி.. இனியாவிற்கு இது தேவைதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியாவிற்காக காலேஜ் சென்று பிரின்ஸ்பலிடம் பாக்கியா கெஞ்சி கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி பற்றி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு பாக்யா சொன்ன வார்த்தையால் கோபி கோபமடைகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா வீட்டிற்கு தெரியாமல் பப்புக்கு சென்று போலீசில் மாட்டிக்கொள்கிறார். அங்கு சரியான நேரத்திற்கு வந்த ராதிகா அவரை காப்பாற்றி பாக்யாவிடம் உங்களுக்கு பிள்ளை வளர்க்க தெரியல என்று அவமானப்படுத்துகிறார். அதே நேரத்தில் இனியா மீது வருத்தத்தில் பாக்கியா இருக்கும் நிலையில் இனியாவை மீண்டும் தன்னோடு கூட்டிட்டு போவதற்காக கோபி பாக்கியா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இனியா நான் மீண்டும் உங்களோடு வரல நான் அம்மாவுடன் இந்த வீட்டிலேயே இருந்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில் இனி இனியாவை நாமே காலேஜில் விட்டுட்டு நாமே கூட்டிட்டு வர வண்டும் என்று ஈஸ்வரி முடிவெடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் இனியாவை காலேஜிலிருந்து டிஸ்மிஸ் செய்தாச்சி நாளைக்கு உங்க அம்மாவை அல்லது அப்பாவை காலேஜுக்கு கூட்டிட்டு வந்து டிசி வாங்கிட்டு போய்விட வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். இனியா கோபிக்கு போன் போட்டு காலேஜில் நடந்ததைப் பற்றி சொல்ல கோபி உனக்கு அப்பா இருக்கேன் டா நான் கண்டிப்பா உனக்காக வரேன் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியாவிற்காக பாக்யா, ஈஸ்வரி, ராமமூர்த்தி என எல்லோரும் காலேஜுக்கு போய் இருக்கின்றனர். அப்போது அவர்களிடம் பிரின்சிபல் இவளோட டிசியை வாங்கிட்டு போய் வேற ஏதாவது காலேஜ்ல சேர்த்துக்கோங்க என்று சொல்ல, பாக்யா மேடம் ப்ளீஸ் மேடம் மன்னிச்சு விட்டுருங்க என்று கையெடுத்து கும்பிடுகிறார்.
அப்போது பிரின்சிபல் இனியாவோட அப்பா எங்கே என்று கேட்க ஈஸ்வரி இனியாவோட அப்பா இல்ல... அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் வீட்டில் இருக்கும்போது கோபி கோபமாக பாக்யா வீட்டிற்கு வந்து பிரின்ஸ்பல்கிட்ட சொல்ற அளவுக்கு என்ன இருந்துச்சு என்று கோபப்பட, ராமமூர்த்தி உண்மையைதான சொன்னோம் என்று சொல்லகிறார்.
புது BMW காரில் குழந்தைகளை கூட்டிட்டு போன காரணமே இதுதான்.. அம்மாவின் ஏக்கம்! KPY தங்கதுரை நெகிழ்ச்சி
கோபி என்ன உங்க பையன் இல்லன்னு சொல்லுற உரிமை உங்களுக்கு இருக்கு ஆனா நான் இனியாவோட அப்பா இல்லன்னு சொல்ல இங்க உங்க யாருக்குமே உரிமை கிடையாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார். ஏற்கனவே கோபியாலும் இனியாவாளும் பாக்யா வீட்டில் பல பிரச்சனைகள் வந்திருந்தாலும் இப்போதும் திருந்தாத இனியா மீண்டும் கோபிக்கு போன் போட்டு காலேஜில் நடந்த விஷயத்தை பற்றி பேசி இருக்கும் நிலையில் அடுத்து என்ன பூகம்பம் வெடிக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications