நாலு நாளா நான் இங்கே தான் இருக்கிறேன்...! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி கோபி.. காரணம் இதுதானா?
பாக்கியலட்சுமி சீரியல் கோபி தான் கேரளாவில் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பிஸியாக இருக்கும் நேரத்தில் புதியதாக கேரளாவிற்கு சென்றிருக்கும் செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
நான்கு நாட்களாக கேரளாவில் இருப்பதாகவும் அதற்கான காரணத்தை விரைவில் தெரிவிக்கிறேன் என்றும் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் நடிகர் சதீஷ் வெளியிட, ரசிகர்களின் மத்தியில் அதிகமான கேள்விகள் குவிந்து வருகிறது.

பாராட்டப்படும் நடிப்பு
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த சீரியலில் பாக்கியா கதாநாயகியாக இருந்து வருகிறார். இவரை வேண்டாம் என்று விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவருடைய கணவர் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல் தற்போது ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஒரு பக்கம் கோபியை ரசிகர்கள் திட்டிக்கொண்டு வந்தாலும், பாக்யா மற்றும் ராதிகா இருவருடைய பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கும் இடங்களில் இவருடைய நடிப்பு அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

கோபியின் வேண்டுகோள்
வில்லனாக இருந்தால் அனைவரும் திட்டுவார்கள் என்று பார்த்தால் இவர் நடிக்கும் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார். அந்த அளவிற்கு இவர் அல்டிமேட் நடிப்பை இந்த சீரியலில் வெளிகாட்டி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்திலும் இவர் ஆக்டிவாக இருந்து வருகிறார். கோபியாக அனைவருக்கும் பரிசயமான இவர் பெயர் சதீஷ் தான் என்பது பலருக்கும் தெரியாமல் தான் இருந்து வருகிறது. சமூக வலைதளத்தில் தினமும் தான் செய்யும் சின்ன சின்ன வேலைகள் மற்றும் தனக்கு மனம் கவர்ந்த வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட இவர் இந்த பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் ரஞ்சித் அறிமுகமானதை பற்றியும் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

புது இடம்
நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இனி பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபி விலகப் போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர் ஆனால் அதற்கும் விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு நான் இந்த சீரியலை விட்டு விலகப் போவதில்லை. எனக்கு ஆதரவு தந்தது போல புதியதாக இந்த சீரியலுக்கு நடிக்க வந்திருக்கும் நடிகர் ரஞ்சித்துக்கும் ஆதரவு கொடுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டேன் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் கேரளாவில் இருக்கிறேன். தன்னுடைய நெற்றியில் இருக்கும் சந்தனத்தை பார்க்கும் போதே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இங்கே அமைதியான ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

என்னவாக இருக்கும்
அதுமட்டுமல்லாமல் தெய்வீக மனம் கமலும் இந்த இடத்தில் நான் இருப்பதற்கு காரணம் சில நாட்களில் நானே சொல்கிறேன். நான்கு நாட்களாக இங்கே இருக்கிறேன் என்று ஒரு சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் இவர் வெளியிட்டு இருக்கிறார். அதனால் ரசிகர்கள் இனி பாக்கியலட்சுமி சீரியல் புதிய இடத்திற்கு மாறப்போகிறதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் கோபி புதிய சீரியலுக்கு மாறி விட்டாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே கோபியின் கதை இனி குறைய போகிறது பழனிச்சாமியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், கோபி புதிய சீரியலுக்கு அறிமுகம் ஆகிவிட்டாரா? என்பது அவரே இன்னும் ஒரு சில நாட்களில் கூறுவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications