பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய பாக்கியலட்சுமி இனியா.. ஆனால்! இப்படி செய்யலாமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடிகை நேஹா நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் நடிப்பதற்கு முன்பே பல சேனல்களில் நடித்திருக்கிறார். அதுவும் சன் டிவியில் வாணி ராணி, சித்தி போன்ற பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
அதுபோல நேஹா பாக்கியலட்சுமி சீரியலிலும் கூட குழந்தை நட்சத்திரமாகத்தான் இருந்தார். பல வருடங்களாக பள்ளி படிப்பை படிப்பது போன்றே இவருடைய காட்சிகள் இருப்பது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதனால் இப்போது பல போராட்டங்களுக்குப் பிறகு நேஹா அதாவது இனியா 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து இருப்பது போன்று காட்சிகளை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய 22 ஆவது பிறந்த நாளை வெகு விமர்சனமாக நேஹா கொண்டாடி இருக்கிறார். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பலூன்கள், தன்னை சுற்றி வண்ண வண்ண நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, கையில் ஒரு பெரிய கேக்கை வைத்து அந்த கேக்குக்கு மெழுகுவர்த்தியை தன்னுடைய வாயில் வைத்து இன்னொருவர் அதில் தீ பற்ற வைக்க அதை ஸ்டைலாக எடுத்து அந்த கேக்கில் வைத்து ஊதி அந்த கேக்கை வெட்டி தன்னுடைய 22 ஆவது பிறந்தநாள் வந்துவிட்டது என்று ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.
இவருடைய இந்த செயல் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இனியாவிற்கு இத்தனை வயசு ஆகிவிட்டதா என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. காரணம் நேஹாவாக ரசிகர்களுக்கு இவர் தெரிந்ததை விட இனியவாகத்தான் பலருக்கும் தெரியும். இவருடைய இரண்டு கெட்டான் கேரக்டரை பார்த்து பலரும் இவரை திட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.
காரணம் பாக்கியாவிற்க்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கும் இனியா திடீரென்று பாக்யா செய்யும் செயலை பார்த்து கோபப்படவும் செய்வார். ஒரு பக்கம் கோபியில் நடவடிக்கையை பார்த்து கோபப்படுவார். அதே நேரத்தில் திடீரென்று அவருக்கு சப்போர்ட்டும் செய்வார். இதனால் ரசிகர்கள் இவரை அடிக்கடி திட்டி வருவார்கள். ஆனால் அதை எல்லாம் நேஹா கண்டு கொள்வதே கிடையாது. பாக்கியலட்சுமி சீரியலில் கூட இப்போது மகா சங்கமம் நடந்து கொண்டிருப்பதால் இனியா ராதிகாவோடு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு போயிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சங்கத்தில் பாக்கியா எதிர்பார்த்தபடியே சமையல் காரண்ட்ராக்ட் மிகச் சிறப்பாக செய்து முடித்து விட்டார். அதற்காக அமைச்சரிடம் பாராட்டும் வாங்கி விட்டார். மறுபக்கத்தில் கதிர் மற்றும் ராஜியின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகா சங்கமம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மீண்டும் பாக்யாவின் வீடு பற்றிய கதைதான் பயணிக்க போகிறது. அப்போது மீண்டும் நேஹாவிற்க்கு அதிகமாக நடிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இனியாவிற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்பது அவருடைய ரசிகர்களின் வருத்தமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சீக்கிரமாக இனியா காட்சிகளை அதிகமாக வைங்க என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
அதுபோல நேஹா பாக்கியலட்சுமி சீரியலில் மட்டுமல்லாமல் முதல் முதலாக இவர் பிள்ளை நிலா என்ற சீரியலின் மூலமாகத்தான் குழந்தை நட்சத்திரமாக சின்ன திறையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதை தொடர்ந்து தான் இவர் வாணி ராணி சித்தி 2 போன்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் வாணி ராணி சீரியலில் இவருடைய நடிப்பு அதிகமானோரால் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications